»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை பிரதியுஷாவை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது காதலர் சித்தார்த்த ரெட்டிசிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த மாதம் 23ம் தேதி ஹைதராபாத்தில் நடிகை பிரதியுஷாவும், அவரது காதலரும் காதல் தோல்வியால் விஷம்குடித்ததாக கூறப்பட்டது. இதில் பிரதியுஷா உயிரிழந்தார். அவரது காதலர் தீவிர சிகிச்சைக்கு பிறகுகுணமாகிவிட்டார்.

இதற்கிடையில் பிரதியுஷாவை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கற்பழித்துக் கொலை செய்துள்ளனர் என்ற திடுக்கிடும்தகவலை, அவரை இரண்டாவதாக பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்தார்.

இதையடுத்து பிரதியுஷாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திர திரையுலகினர்,முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.ஐ.டி. போலீஸ்விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து சி.ஐ.டி. போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதியுஷாவின் காதலரிடம்விசாரணை நடத்தினர். சித்தார்த்த ரெட்டியின் வாக்கூமூலம் முன்னுக்கு முரணாக இருந்ததால் அவரை போலீசார்கைது செய்தனர்.

அவர் மீது கொலை, கற்பழிப்பு மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் அவர் மாஜிஸ்திரேட்டின் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரதியுஷா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில எதிர்கட்சிகள் கோரிக்கைவிடுத்துள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil