»   »  பிரதியுஷா தற்கொலை வழக்கு: காதலன் ராகுல் சிங்குக்கு முன்ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவு

பிரதியுஷா தற்கொலை வழக்கு: காதலன் ராகுல் சிங்குக்கு முன்ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலன் ராகுல் சிங்குக்கு முன்ஜாமீன் வழங்கி, மும்பை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிவி நடிகை பிரதியுஷா சமீபத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் ராகுல் சிங் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Pratyusha's Lover Gets Anticipatory Bail

இந்த வழக்கில் தன்னைப் போலீசார் கைது செய்யக் கூடாது என மும்பை ஐகோர்ட்டில் ராகுல் சிங் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் ராகுல் சிங்கின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி "மனுதாரருக்கும் (ராகுல்சிங்), பிரதியுஷாவுக்கும் இடையே வாக்குவாதம் இருந்தது சாட்சிகளின் வாக்குமூலம் மூலம் தெரியவருகிறது.

அதேசமயம், பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதற்கான எந்தவொரு முதல் நிலை ஆதாரமும் இல்லை" என்று தீர்ப்புக் கூறி ராகுலுக்கு முன்ஜாமீன் வழங்கிட உத்தரவு பிறப்பித்தார்.

ராகுல் சிங்-பிரதியுஷாவின் கடைசி தொலைபேசி உரையாடலை முழுமையாகக் கேட்ட பின்னர் நீதிபதி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Pratyusha Suicide Case: Rahul Singh Gets Anticipatory Bail from Mumbai High Court.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil