Don't Miss!
- News
அடிக்கடி குலுங்கும் டெல்லி! நிலநடுக்கம் திடீரென அதிகரிக்க என்ன காரணம்! தமிழ்நாட்டின் உண்மை நிலை என்ன
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Finance
என் இதயமே கனத்து விட்டது.. 8 மாத கர்ப்பிணி பெண் கூகுள் பணி நீக்கம் குறித்து கலக்கம்.. !
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
புரட்சித் தலைவர் பட்டத்துக்கு யாரும் ஆசைப்படல.. சூப்பர் ஸ்டார் மட்டும் ஏன்? பிரவீன் காந்தி விளாசல்!
சென்னை: விஜய் மற்றும் அஜித்துக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது என்றும் ரஜினிகாந்த் பக்கம் எல்லாம் நீங்க திரும்பிக் கூட பார்க்கக் கூடாது என விவாத நிகழ்ச்சியில் இயக்குநர் பிரவீன் காந்தி விளாசி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய்க்கு திடீரென கொடுக்க காரணம் என்ன? என்றும் அவர் அப்படி பேசும் போது அமைதியாக இருந்த நிலையில் அதை ஏற்றுக் கொண்டாரா? என்றும் கேள்விகள் கிளம்பின.
பிஸ்மி ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர்ஸ்டார் என சொன்னது பெரும் விவாதத்தையே கிளப்பிய நிலையில், இயக்குநர் பிரவீன் காந்தி பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.
800
கோடி
எங்கே..
187
கோடி
எங்கே..
சூப்பர்ஸ்டார்
ஆக
ஆசைப்படலாமா
விஜய்..
மீசை
ராஜேந்திரன்
விளாசல்!

இப்போ யாரு சூப்பர் ஸ்டார்
பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருவபர் நடிகர் ரஜினிகாந்த். ஓவர்சீஸ் மார்கெட்டை எல்லாம் தமிழ் சினிமாவுக்கு திறந்து விட்டவர். இன்னமும் கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது அவரது 2.0 படம் தான் என்றும் இதையெல்லாம் விஜய் தாண்டிய பிறகு இந்த பக்கம் வாங்க என ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நம்பர் ஒன் இல்லை
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை விட வசூலில் கமல்ஹாசனின் விக்ரம், மணிரத்னம் இயக்கி விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் படங்கள் தான் முதலிடத்தில் உள்ளது என்றும் நடிகர் விஜய் வசூல் ரீதியாக முதலிடத்தை பிடிக்கவில்லையே பிறகு எப்படி ஒன்.. ஒன்.. ஒன்.. நம்பர் ஒன் என விஜய்யை தில் ராஜு சொல்லலாம் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

பிரவீன் காந்தி விளாசல்
தந்தி டிவி தொலைக்காட்சியில் நேற்று நடந்த ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ஜோடி, ஸ்டார் படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி நடிகர் விஜய் அஜித்துடன் தான் போட்டிப் போட வேண்டும் என்றும் ரஜினிகாந்த் உடன் போட்டி போடக் கூடாது என்றும் ரஜினிகாந்துக்கு நிகராக என்றும் விஜய் மாற முடியாது என விளாசினார்.

ரஜினியின் காப்பி
நடிகர் விஜய் ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் ரஜினிகாந்த் படங்களையும் ரஜினியின் மேனரிசத்தையும் காப்பியடித்து பல படங்களில் நடித்துள்ளார். அந்த படங்களை எல்லாம் நீங்கள் பார்க்கவே இல்லையா? என விஜய் சார்பாக பேசிய தளபதி ரசிகர் விஷாலை வெளுத்து வாங்கினார்.

புரட்சித் தலைவர்
சுப்ரீம் ஸ்டார் என்றால் அது சரத்குமார் தான், அந்த பதவிக்கு யாராவது ஆசைப்பட்டார்களா? டாப் ஸ்டார் என்றால் பிரசாந்த் தான், புரட்சித் தலைவர் என்றால் எம்ஜிஆர் தான், ரஜினிகாந்த் புரட்சித் தலைவராக ஆகவேண்டும் என ஆசைப்பட்டாரா? நடிகர் திலகம் என்றால் சிவாஜி கணேசன் தான் அதே போலத்தான் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் மட்டுமே என இயக்குநர் பிரவீன் காந்தி ஒரே போடாக போட்டு விட்டார்.

தளபதி சூப்பர்ஸ்டாரை விட பெருசு
தளபதி விஜய் ரசிகராக விஷால் என்பவர் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய நிலையில், தளபதி பட்டம் சூப்பர்ஸ்டாரை விட பெருசு என்றும் விஜய் தான் இப்போதைக்கு நம்பர் ஒன் என்றும் பேசினார். இந்த ஆண்டு டாப் 10 பாக்ஸ் ஆபிஸில் ஆவது விஜய்யின் வாரிசு முதலிடத்தை பிடித்தால் அதன் பிறகு வந்து பேசுங்கள் என ரஜினி ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.