விஜய் சேதுபதி நோஸ் கட் பண்றதுலயே இருக்காதீங்க.. சண்டை போட்டா கலீஜ் ஆகிடும்.. பிரவீன் காந்தி அட்டாக்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் இயக்குநர் பிரவீன் காந்தி முதல் போட்டியாளராக எவிக்ட் ஆகியிருக்கிறார். வீட்டிலிருந்து வெளியே வந்த அவர் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்துவருகிறார். அந்தப் பேட்டிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி அனுபவங்கள் குறித்து பேசிவரும் அவர்; சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய அந்த நிகழ்ச்சி இப்போது ஒன்பதாவது சீசனில் நிற்கிறது. ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்க எட்டாவது சீசனிலிருந்து அந்த பொறுப்பை விஜய் சேதுபதி கையில் எடுத்திருக்கிறார். அவர் தனது ஸ்டைலில் வார இறுதி நாட்களில் வீட்டு போட்டியாளர்களிடம் பேசும் விதம் ரசிக்கும்படியே இருக்கிறது.
பிக்பாஸ் 9: இந்த சீசனின் முதல் நாளிலிருந்தே தனது பாணியை மாற்றி அதிரடிதான் காட்டிவருகிறார். தொடக்க நிகழ்ச்சியில் உங்களை கட்டிப்படித்துக்கொள்ளட்டுமா என்று கேட்ட துஷாரிடமிருந்து தூரமாக வந்தது, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருக்கு பக்குவமாகவும், கண்டிப்புடனும் அட்வைஸ் செய்தது என்று அவரது அணுகுமுறை இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே ரசிகர்களை கவர்ந்துவிட்டது என்பதுதான் உண்மை.

எல்லோருக்கும் பல்புதான்: முக்கியமாக நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் போட்டியாளர்களை சந்தித்தபோது எழுந்து நின்று பெயர் சொல்லாத ஆதிரையை அவர் ஹேண்டில் செய்த விதம் ஆதரவு, விமர்சனம் இரண்டையும் பெற்றது. அதேபோல் கம்ரூதினிடம் பேசிக்கொண்டிருந்தபோது சிரித்த திவாகரை கண்டித்தது, பத்து குரல்கள் சொன்ன கலையரசனிடம் குரலுக்கு விளக்கம் கேட்டு; உங்களது புரிதல் தவறு என்பதை உணர்த்தியது என்று டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறார் சேது.
இந்த வாரம் என்ன நடக்கும்?: இந்த வார இறுதியில் அவரது நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் பொம்மைகள் டாஸ்க்கில் FJவை தொடக்கூடாத இடத்தில் பார்வதி தொட்டதாக வந்த பஞ்சாயத்து, அதை வைத்து ஆதிரையும், எஃப்ஜேவும் நிகழ்த்திய ஆபாச உரையாடல், வாட்டர் மெலன் ஸ்டாரை கம்ரூதின் தொடர்ந்து உருவ கேலி செய்வது, மரியாதை இல்லாமல் பேசுவது என பல அலப்பறைகள் வீட்டுக்குள் நடந்திருக்கின்றன. சேது என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கலாம்.
பிரவீன் காந்தி எவிக்ட்: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கடந்த வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி இந்த சீசனில் முதல் ஆளாக எவிக்ட் ஆகியிருக்கிறார். அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது போட்டியாளர்களிடம் அவர் பேசியது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் விஜய் சேதுபதி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.
பிரவீன் காந்தி பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "விஜய் சேதுபதி எனக்கு சினிமாவில் ஜூனியர். ஆனால் பிக்பாஸில் எனக்கு சீனியர். அதனால்தான் அவரை என்னால் எதிர்த்து பேச முடியவில்லை. அவரிடம் சண்டை போட்டால் கலீஜாகிவிடும். விஜய் சேதுபதி அவர்களே போட்டியாளர்கள் பேசுவதற்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள். கமல்ஹாசன் சார் அதைத்தான் செய்தார். என்னை விட்டுடிவிடுங்கள். அங்கு இருப்பவர்களையாவது இனிமேல் பேச விடுங்கள். அவர்கள் பேசுவதற்கு முன்பே அவர்களை நோஸ் கட் செய்வதிலேயே இருக்கிறீர்கள். பிக்பாஸே நீங்கள்தான் என்கிற மாதிரி நான் சொல்றதைத்தான் கேட்க வேண்டும் என்கிற மனநிலை இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











