twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லெபனான் வெடி விபத்து.. பிரபலங்கள் இரங்கல். இன்னும் 2020ல என்னலாம் நடக்கப் போகுதோ #PrayForLebanon

    |

    பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடந்த சக்தி வாய்ந்த வெடி விபத்தில் 78 பேர் பலியாகி உள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    Recommended Video

    Lebanon தலைநகர் Beirut-ல் திடீர் குண்டுவெடிப்பு

    பெய்ரூட் துறைமுகப் பகுதியில் திடீரென வெடித்த வெடி விபத்தால், அருகில் இருந்த கட்டிடங்கள் நடுங்கின, ஜன்னல்கள், கதவுகள், கண்ணாடிகள் எல்லாம் உடைத்துக் கொண்டு விழுந்தன.

    பூகம்பம் வந்தது போலவும், அணு குண்டு வெடித்தது போலவும் இருந்ததாக மக்கள் அச்சத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட ஆரம்பித்தனர்.

    ஊரடங்கில் ஊரடங்காமல் ஊர் சுற்றிய நடிகை.. வெடித்தது சர்ச்சை!ஊரடங்கில் ஊரடங்காமல் ஊர் சுற்றிய நடிகை.. வெடித்தது சர்ச்சை!

    வெடி விபத்துக்கான காரணம்

    வெடி விபத்துக்கான காரணம்

    லெபனான் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் ஏதும் நடந்ததா? என்ற அச்சம் கிளம்பிய நிலையில், பெய்ரூட் துறைமுக சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

    பிரபலங்கள் இரங்கல்

    பிரபலங்கள் இரங்கல்

    இந்த வெடி விபத்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், #PrayForLebanon என்ற ஹாஷ்டேக்கும் உலகளவில் டிரெண்டாகி வருகிறது. ஏற்கனவே போர் பாதிப்பால் பாதிப்பு அடைந்துள்ள அந்த நாடு மீண்டும் ஒரு இழப்பை சந்தித்துள்ளதை அறிந்த பலரும் உதவவும் முன் வந்துள்ளனர்.

    பிரியங்கா சோப்ரா பிரார்த்தனை

    பிரியங்கா சோப்ரா பிரார்த்தனை

    பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில், பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான செய்தியை பகிர்ந்து, இது மிகவும் மோசமான விபத்து, இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் சொந்தங்களை இழந்த உறவுகள் அனைவருக்கும் எனது அன்பும் பிரார்த்தனையும் போய் சேரட்டும் என பதிவிட்டுள்ளார்.

    ஹரிஷ் கல்யாண் பிரார்த்தனை

    ஹரிஷ் கல்யாண் பிரார்த்தனை

    வெகு தொலைவில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து, வெடிப்பு காரணமாக எரிந்து கொண்டிருந்த துறைமுகத்தை ஒருத்தர் படம் எடுத்துக் கொண்டு இருந்தார். திடீரென ஏற்பட்ட பயங்கர வெடிப்பு, துறைமுகத்துக்கு அருகில் இருந்த கட்டிடங்களை துவம்சம் பண்ணி அந்த நபர் இருக்கும் இடம் வரைக்கும் ஏற்பட்ட பாதிப்பு வீடியோவை ஷேர் செய்த நடிகர் ஹரிஷ் கல்யாண், லெபனான் மக்களுக்கு தனது பிரார்த்தனைகள் என பதிவிட்டுள்ளார்.

    2020ல் இன்னும் என்னலாம் நடக்கப் போகுதோ

    2020ல் இன்னும் என்னலாம் நடக்கப் போகுதோ

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்து புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் நெஞ்சை உலுக்குகின்றன. இந்த 2020ம் ஆண்டு புதிய பேரழிவுகளுடன் மீண்டும் பயமுறுத்த தொடங்கி இருக்கிறது. லெபனான் மக்கள் இந்த ஆபத்தில் இருந்து மீள என்னுடைய பிரார்த்தனைகள் என நடிகை பிரியா ஆனந்த் பதிவிட்டுள்ளார்.

    இதயம் நொறுங்கியது

    இதயம் நொறுங்கியது

    நடிகை மஞ்சிமா மோகன், தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட லெபனான் வெடிப்பு செய்தியை பகிர்ந்து, ஹார்ட் ப்ரோக்கன் எமோஜியை பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் தவித்து வரும் லெபானான் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேராபத்தை உணர்ந்த அவர், மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். அவரது ரசிகர்களும், பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    சாந்தனு ட்வீட்

    சாந்தனு ட்வீட்

    பெய்ரூட் டுடே செய்தி சேனல் வெளியிட்ட பிரம்மாண்ட வெடி விபத்து வீடியோவை பதிவிட்டு, நடிகர் சாந்தனுவும் தனது இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளார். மேலும், கோலிவுட்டை சேர்ந்த பல நடிகர்கள் #PrayForLebanon என்ற ஹாஷ்டேக்கில் தங்கள் இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Indian celebrities send their prayers to the Lebanon people who suffers lot in the yesterday massive blast at Beirut.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X