Just In
- 12 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 44 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
Don't Miss!
- News
சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு!
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாஸ்க்ல பாஸ் ஆனா தான் பிக் பாஸ்ல என்ட்ரியே.. அதுக்குத்தான் அந்த பிரபல நடிகை அப்படி இறங்கினாரா?
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு பல வித டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வேண்டும் என்றாலே சில பல டாஸ்க்குகளில் பாஸ் ஆனால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற ரகசிய தகவல் கசிந்துள்ளது.
நடிகை கிரண் உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் என கருதப்படும் பல பிரபலங்களும் தங்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை செய்து தங்களை நிகழ்ச்சிக்கு தகுதியானவர்கள் என நிரூபித்த பின்னரே அவர்கள் போட்டியாளர்களாக சேர்க்கப்படுவார்களாம்.
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக.. டிஆர்பி குயின்.. 'வத்திக்குச்சி' வனிதாவுக்கு மீண்டும் வாய்ப்பு?

ஏன் அவர்கள் மட்டும்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அடுத்த மாதம் அக்டோபர் 4ம் தேதி தொடங்கப்படும் என்ற தகவல்கள் கசிந்து வைரலாகின. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர்கள், நடிகைகள் அல்லது மாடல் அழகிகள் கலந்து கொள்வது வழக்கம். ஏன் இவர்களை தேர்வு செய்கிறார்கள் என்றால், அவர்கள் பிரபலமானவர்கள் என்பதை விட நடிக்கத் தெரிந்தவர்கள் என்பது தான் உண்மை.

பிக்பாஸ் ஸ்க்ரிப்டடா?
பிக் பாஸ் நிகழ்ச்சி சீரியலை போல ஸ்க்ரிப்டட் இல்லை. ஆனால், நிகழ்ச்சியின் போக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்காக செமி ஸ்க்ரிப்டட் வொர்க்குகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும், ஓய்வு என பல விஷயங்கள் முன்னதாகவே போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு விடும் என்றும் கூறுகின்றனர்.

நிகழ்ச்சிக்கு முன்பே
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபலங்களை அணுகும் போது அவர்களுக்கு சில டாஸ்க்குகளை நிகழ்ச்சியை நடத்தும் இயக்குநர்கள் கொடுப்பது வழக்கம் என்ற தகவலும் கசிந்துள்ளது. சம்பளம் பற்றிய டீலிங்கை எல்லாம் விட மிகவும் முக்கியமானது அந்த டாஸ்க்குகளை அந்த பிரபலங்கள் செய்கிறார்களா? இல்லையா என்பதில் தான் இருக்குதாம்.

நடிகை கிரணுக்கு
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக நடிகை கிரண் கலந்து கொள்ள உள்ளார் என்ற டாக் வைரலாகி வருகிறது. இந்த லாக்டவுன் நேரத்தில் அவருக்கு கொடுத்த டாஸ்க்கை ஏற்றுத் தான் அதற்கு முன்பாக சமூக வலைதளங்களில் இல்லாத அளவுக்கு இப்போ கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதாக கூறுகின்றனர்.

சர்ச்சைகளும்
ரம்யா பாண்டியன் இடுப்பழகும், விஜய் டிவி பிரபலங்களை சுற்றிய சர்ச்சைகளும் சமூக வலைதளத்தில் கடந்த ஒரு மாதமாக வைரலாக மறைமுக காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்கின்றனர். ஆனால், நடிகைகளே தங்களுக்கான ரசிகர்கள் வட்டத்தை பெருக்கிக் கொள்ள இப்படி செய்கின்றனர் என்ற பேச்சுக்களும் அடிபடத்தான் செய்கிறது.

ஷெரின் இடத்தில்
நடிகை கிரண் இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நமீதா, மும்தாஜ், கடந்த சீசனில் காதல் லீலைகளில் கலக்கிய நடிகை ஷெரின் போல இந்த ஆண்டு பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் நடிகை கிரணின் அதிரடி ஆட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.