»   »  கைது செய்தால் தீக்குளிப்பேன்: ப்ரீத்தி அம்மா மிரட்டல்

கைது செய்தால் தீக்குளிப்பேன்: ப்ரீத்தி அம்மா மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

என் மகள் ப்ரீத்தி வர்மா கொடுத்துள்ள அபாண்டமான புகாரின் பேரில் என்னையும், எனது கணவரையும் கைது செய்ய போலீஸார் முயன்றால் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து செத்துப் போவோம் என்று நடிகை ப்ரீத்தி வர்மாவின் தாயார் ரம்யா ஆவேசமாக கூறியுள்ளார்.

தலைமறைவாக இருந்து வந்த ப்ரீத்தி வர்மா நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். தனது பெற்றோர் விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதால்தான் தலைமறைவானதாக வாக்குமூலம் கொடுத்தார்.

நீதிமன்றத்திற்கு வந்திருந்த ப்ரீத்தியின் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோர் தங்களுடன் வந்து விடுமாறு ப்ரீத்தியிடம் கோரியபோது, அவர் அவர்களுடன் பேச மறுத்து விட்டு காரில் ஏறிப் போய் விட்டார்.

இதற்கிடையே, ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் தாயார் ரம்யா, தந்தை பரத் ஆகியோரை போலீஸார் கைது செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று ப்ரீத்தியின் தாயார் ரம்யா செய்தியாளர்களை அழைத்து திடீர் பேட்டி கொடுத்தார். அப்போது ப்ரீத்தி கூறிய புகார்களை திட்டவட்டமாக மறுத்த அவர் என் மீது ப்ரீத்தி அபாண்டமாக புகார் கூறுகிறார். என்னிடம் பால் குடித்து வளர்ந்த அவள் இப்போது என் மீது அநியாயமாக புகார் கூறுகிறாள். அவள் குடித்த பாலுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஒரு கும்பலிடம் அவள் சிக்கியுள்ளாள். யாரை நல்லவர்கள் என்று எண்ணி அவர்களிடம் ப்ரீத்தி இருக்கிறார்களோ, அவர்கள் நல்லவர்கள் கிடையாது என்பதை சீக்கிரமே புரிந்து கொள்வாள்.

அந்தக் கும்பல் ஒரு விபச்சாரக் கும்பல். அவர்கள் ப்ரீத்தியை நாசமாக்கி விடுவார்கள். ப்ரீத்தி கொடுத்த புகாரை வைத்து எங்களை போலீஸார் கைது செய்யக் கூடாது. எங்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லாமல் போலீஸார் கைது செய்ய முயன்றால் காவல் நிலைய வாசலில் வைத்து தீக்குளித்து செத்துப் போவோம்.

இதுவரை நாங்கள் கோர்ட் படியேறியதே கிடையாது. இப்போது எங்களது மகளால் கோர்ட்டு வரை வந்து விட்டோம்.

இவ்வளவு பேசும் ப்ரீத்தி வர்மா, இந்த ஒன்றரை மாதத்தில் எப்படி இருந்தாள் என்பதை மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தால் தெரிந்து விடும் என்றார் ரம்யா ஆவேசமாக.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil