»   »  ப்ரீத்தி வர்மா படத்துக்கு தடை!

ப்ரீத்தி வர்மா படத்துக்கு தடை!

Subscribe to Oneindia Tamil

எஸ்கேப் நடிகை ப்ரீத்தி வர்மா நடித்துள்ள கேள்விக்குறி படத்திற்கு சான்றிதழ் தர முடியாது என்று சென்சார் போர்டு கூறி விட்டது.

கொஞ்ச காலத்திற்கு முன்பு அப்பா, அம்மாவின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி பின்னர் சென்னைக்குத் திரும்பி நீதிமன்றத்தில் சரணடைந்து போலீஸ் பாதுகாப்பு பெற்றார் ப்ரீத்தி வர்மா.

மறுபடியும் படங்களில் புத்துணர்ச்சியுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் நடித்த கேள்விக்குறி படத்திற்கு சான்றிதழ் தர முடியாது என்று தணிக்கை வாரியம் கூறியுள்ளதால் படத்தை திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஜெய்லானி என்பவர் புதுமுக ஹீரோவாக நடித்துள்ளார். அவர்தான் படத்தையும் தயாரித்துள்ளார். ப்ரீத்தி வர்மாவும், சோனாவும் ஹீேராயின்களாக நடித்துள்ளனர். இருவரும் கிளாமரை அள்ளிப் பிழிந்து கொடுத்து நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து சான்றிதழ் வாங்குவற்காக தணிக்கை வாரியத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் படத்தில் காவல்துறையை விமர்சிக்கும் வகையில் வசனங்கள், காட்சிகள் உள்ளதால் இப்படத்துக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது என காவல்துறை சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினரிடம் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் படத்துக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது என்று உறுதியாக கோரியதால் படத்தைத் திரையிட அனுமதிக்க முடியாது என்று தணிக்கை வாரியம் கூறி விட்டது.

இதனால் அப்செட் ஆகிப் ேபான ஜெய்லானி, டெல்லியில் உள்ள மேல் முறையீட்டுக் குழுவிடம் அப்பீல் செய்யப் போவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெய்லானி கூறுகையில், படத்தில் எனது மனைவியை ேபாலீஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அவர் திரும்பி வரவில்லை.

இதையடுத்து எனது மனைவி என்ன ஆனார் என்று போய் கேட்கிறேன். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து காவல்துறை ஆணையரையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவர்களை மிரட்டி தகவல் பெறுகிறேன்.

இதுதான் காட்சி. இது தப்பா? இந்த ஒரு காட்சியை மட்டும் வைத்து ஒட்டுமொத்தமாக காவல்துறையை நாங்கள் அவமதிப்பதாக கூறுவது வியப்பாக உள்ளது.

கருத்து சுதந்திரத்தை காவல்துறை தடுக்கப் பார்க்கிறது. இதை எதிர்த்து முறையீடு செய்யவுள்ேளன் என்றார் ஜெய்லானி.

முடியல!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil