»   »  மான் நடிகரை சிறையில் சந்தித்த பாலிவுட் தோழி.. ஜாமீனில் வெளியே வந்த சல்மான்!

மான் நடிகரை சிறையில் சந்தித்த பாலிவுட் தோழி.. ஜாமீனில் வெளியே வந்த சல்மான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கம்பி எண்ணும் சல்மான் கான்.

ஜோத்பூர் : மான்வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற இந்தி நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் சிறை எண் 102-ல் அடைக்கப்பட்டார். கடந்த இருதினங்களாக அவர் சிறையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று சல்மான் கானை இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா சிறைக்குச் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. நட்பின் அடையாளமாக இந்த சந்திப்பு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Preity zinda meets salman khan in jail

சல்மான் சிறைத்தண்டனை பெற்றது குறித்து பிரீத்தி ஜிந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "சுற்றுப்புறம் இருளால் சூழப்பட்டிருப்பினும் ஒளி இருக்கிறது என்பதில் நம்பிக்கை வைப்போம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் "இதுவும் கடந்துவிடும்! எல்லாமும்கூட தோல்வியடைந்தாலும் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டிருப்போம்" என்ற வாசகத்தைப் பதிவிட்டுள்ளார்.

சோனம் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் சல்மான் கானுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சோனாக்ஷி சின்ஹா, சயீப் அலிகான், ஜாக்குலின் பெர்ணான்டஸ், சத்ருகன் சின்ஹா, மலாய்க்கா அரோரா உள்ளிட்ட பாலிவுட் பிரமுகர்கள் பலரும் சல்மான் கானின் தந்தையைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சற்றுமுன்பு சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ. 50000 சொந்தப் பிணையத் தொகை, மற்றும் இருவர் ரூ.25,000 பிணையத்தொகையுடன் சல்மானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது ஜோத்பூர் நீதிமன்றம்.

English summary
Bollywood actress preity zinda meets Salman khan in jodhpur jail yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X