»   »  ஓரமா போய் விளையாடு: ஐபிஎல் ஏலத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அட்டகாசம்

ஓரமா போய் விளையாடு: ஐபிஎல் ஏலத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அட்டகாசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் ஏலத்தில் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அட்டகாசம் செய்து வருகிறார்.

2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களை ஏலத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஏல நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பல் வலியுடன் ஏலத்தில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏலம்

ஏலம்

ஏலத்தில் வரும் வீரர்களின் விலையை தாறுமாறாக ஏற்றுவிடுகிறார் ப்ரீத்தி ஜிந்தா. சில வீரர்களின் பெயர்களை அறிவித்த உடனேயே அவர் விலையை உயர்த்திவிடுகிறார்.

நான் தான்

நான் தான்

ப்ரீத்தி ஜிந்தா கேமராவுக்கு நேராக அமர்ந்துள்ளார். நேற்றைய ஏலத்தின்போது ஒருவர் ப்ரீத்திக்கும் கேமராவுக்கும் இடையே வர ஓரமா போ என்று அவரிடம் கூறினார்.

அக்கப்போர்

அக்கப்போர்

இன்றும் கேமராவுக்கு முன்பு பளிச்சென்று அமர்ந்துள்ளார். இன்றும் ஒருவர் ப்ரீத்தியை மறைக்க அவர் அந்த நபரை தள்ளி அமரச் செய்து கேமராவுக்கு நேராக வந்துவிட்டார்.

கிண்டல்

கிண்டல்

ப்ரீத்தி ஏலம் எடுக்கும் விதம், சம்பந்தமே இல்லாமல் சில வீரர்களின் விலையை உயர்த்திவிடுவது குறித்து நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Bollywood actress Preity Zinta is trolled by Netizens for the way she bids players in the IPL auction 2018. She is obsessed with camera that she doesn't allow anyone to come between her and camera.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil