»   »  'மெடுல்லா ஆப்லேங்கட்டா' ப்ரேம் குமார் இயக்கும் 96!

'மெடுல்லா ஆப்லேங்கட்டா' ப்ரேம் குமார் இயக்கும் 96!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'மெடுல்லா ஆப்லேங்கட்டா' - இந்த வார்த்தையை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு முன்னர் யாரிடமாவது சொன்னால் நம்மை மேலே கீழே பார்த்திருப்பார்கள். ஆனால் ந.கொ.ப.கா படம் மூலம் அந்த வார்த்தையை நம் மனதில் பதிய வைத்தவர் ப்ரேம் குமார். அந்த படத்தின் ஒளிப்பதிவாளரான இவரது சொந்தக் கதையைத் தான் படமாக்கி இருந்தார் பாலாஜி தரணிதரன்.

அந்த ப்ரேம் குமார் இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் முதன்முறையாக ஜோடி சேர்கிறார்கள்.

Prem Kumar directorial debut 96

மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் துவக்க விழா நேற்று) சென்னையில் நடைபெற்றது விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் இயக்குநர் லஷ்மன், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Prem Kumar directorial debut 96

அந்தமானில் விஜய் சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

அத்துடன் கல்கத்தா ராஜஸ்தான் பாண்டிச்சேரி கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

90 களின் வாழ்க்கை முறையை மையப்படுத்தி இந்த 96 உருவாக உள்ளது.

Read more about: tamil cinema, prem kumar
English summary
96, a movie directed by Prem Kumar with the background of nineties.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil