»   »  காதலியை 2 முறை திருமணம் செய்தார் பிரேமம் பட நடிகர்

காதலியை 2 முறை திருமணம் செய்தார் பிரேமம் பட நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பிரேமம் படம் புகழ் சிஜு வில்சன் தனது காதலி ஸ்ருதியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

குறும்படங்களில் நடித்து வந்தவர் சிஜு வில்சன். அல்போன்ஸ் புத்ரனின் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். பிரேமம் படத்தில் நிவின் பாலியின் நண்பராக நடித்திருந்தார் சிஜு.


Premam actor Siju Wilson gets married

சிஜு ஸ்ருதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நேற்று கொச்சியில் நடந்தது. ஸ்ருதி இந்து என்பதால் முதலில் இந்து முறைப்படி காலையில் திருமணம் நடைபெற்றது.


நேற்று மாலை அலுவாவில் உள்ள புனித டோமினிக் தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் நடிகர் நிவின் பாலி, இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் உள்ளிட்ட மலையாள திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


திருமணத்தை தொடர்ந்து பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Premam, Neram fame Malayalam actor Siju Wilson has married his girl friend Shruthi on sunday at Kochi.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil