»   »  ரஜினி, கமலுக்கு ப்ரேமம் இயக்குநரின் கோரிக்கை!

ரஜினி, கமலுக்கு ப்ரேமம் இயக்குநரின் கோரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருவதைப் போல திரையுலகத்திலும் அதிகமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தியேட்டர் டிக்கெட் கட்டணங்களும் ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டதால் டிக்கெட் கட்டணங்கள் விலை உயர்த்தப்பட்டன.

சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆரம்பம் முதலே இருந்து வந்தது. மத்திய அரசும் சில பொருட்களுக்கான வரி விதிப்பிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.

Premam director requests rajini and kamal

இந்நிலையில், 'ப்ரேமம்' படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், சினிமாவையும் சூதாட்டத்தையும் ஒரே ஜி.எஸ்.டி வகையில் வைத்திருப்பது சரியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Premam director requests rajini and kamal

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்து ஜி.எஸ்.டி வரிவிதிப்பு பற்றி அவருடன் பேச வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரிய பிரபலங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் இது பற்றி பேச வேண்டும். உங்கள் பேச்சு வார்த்தை திரையுலகத்தையும், ரசிகர்களையும் காப்பாற்றும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
'Keeping cinema and gambling in the same GST is okay? asks, 'premam' director alphonse puthren. Alphonse puthren requests Rajinikanth and Kamal Hassan to meet Prime Minister.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil