என்கிட்ட இதை எல்லாம் எதிர்பார்க்காதீங்க...பிரேமம் டைரக்டர் சொன்ன பகீர் தகவல்
சென்னை : தயவு செய்து என்னிடம் இதை எல்லாம் எதிர்பார்க்காதீங்க என பிரேமம் பட டைரக்டர் அல்போன்ஸ் கூறி இருப்பது ரசிகர்களை மட்டுமல்ல அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழில் நேரம் படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். மலையாளத்தில் பிரேமம் படத்தை இயக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு மெகா ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படம் அனைத்து மொழிகளிலும் செம ஹிட் அடித்தது.

நயன்தாரா நடிக்கும் கோல்ட்
தற்போது நயன்தாரா நடிக்கும் கோல்ட், பாட்டு ஆகிய படங்களை ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கி வருகிறார். ப்ருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் ஆக்ஷன் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள கோல்ட் படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்ட் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் ஆகியன சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

செம பிளானில் இருக்கார்
பிரேமம் படத்திற்கு பிறகு கிட்டதட்ட 6 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரம் மீண்டும் இயக்குநராக என்ட்ரி கொடுத்துள்ள படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும், சமீபத்தில் தான் ரஜினி, கமல் இருவருக்குமான கதை தன்னிடம் உள்ளதாகவும், அவர்களை வைத்து படம் இயக்கு விரும்புவதாக அவரே ட்வீட் போட்டார். இதற்கிடையில் அஜித்தை சந்தித்து, அல்போன்ஸ் புத்திரன் கதை ஒன்று கூறியதாகவும் தகவங்கள் வெளியாகின.

இதை எங்கிட்ட எதிர்பார்க்காதீங்க
இவரது கோல்ட் படத்தை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் ஷாக் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், தயவு செய்து என்னிடம் இருந்து நேரம் அல்லது பிரேமம் போன்ற படங்களை எதிர்பார்க்காதீர்கள். கோல்ட் படம் நேரம் படத்தை போலவே இருக்கலாம். ஆனால் அதன் வழியில் தனித்துவமானது. கோல்கட் படத்திற்காக 40 க்கும் மேற்பட்ட கேரக்டர்களை புதிதாக எழுதி உள்ளோம். நாங்கள் அனைவரும் உங்களை மகிழ்விக்க முயற்சிக்கிறோம். அதற்கு எங்கள் டீம் கேரன்டி என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க
இதை பார்த்த நெட்டிசன்கள், நேரம், பிரேமம் இரு படங்களுமே தமிழிலும் செம ஹிட் ஆன படங்கள். பிரேமம் போன்ற நல்ல உணர்வுபூர்வமான படங்கள் தேவை. உங்களுக்கு தமிழகத்திலும் ரசிகர் கூட்டம் உண்டு. தயவு செய்து எங்களை ரொம் நாள் காக்க வைக்காதீங்க. அதெல்லாம் விடுங்க பாஸ்...அஜித் வச்சு ஒரு படம் எடுங்களேன். கோல்ட் படம் பார்ப்பதற்கு முன் மக்களுக்கு இது தெளிவான ஐடியாவை தரும் என நினைக்கிறேன் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











