ரஜினி, கமலை இயக்க வேண்டும்...பிரேமம் பட டைரக்டரின் திடீர் ஆசை
சென்னை : பிரேமம் படத்தை இயக்கிய பிரபலமான அல்போன்ஸ் புத்திரன், ரஜினி மற்றும் கமலை இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை மிக நாசுக்காக, அழகாக சொல்லி இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
மலையாளத்தில் நிவின் பாலியை வைத்து நேரம் படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். தொடர்ந்து பிரேமம் படத்தை இயக்கி பிரபலமானார். மலையாளத்தில் இயக்கப்பட்ட இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு, அந்த படங்களும் ஹிட் ஆனது.

கமல், ரஜினியை இயக்க ஆசை
நயன்தாராவை வைத்து கோல்ட் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், தற்போது மீண்டும் நயன்தாரா, ஃபகத் ஃபாசிலை வைத்து பாட்டு படத்தை இயக்கி வருகிறார். இந்த சமயத்தில் இன்று அல்போன்ஸ் புத்திரன் போட்ட ட்வீட்டில், நான் ரஜினி சாரையோ கமல் சாரையோ சந்திக்க வாய்ப்பிருந்தால் அவர்கள் இருவரையும் கவரும் விதமாக என்னிடம் கதை உள்ளது. அதிர்ஷ்டத்தின் அகராதியில் என்னுடைய பெயரும் இருக்கும் என நம்புகிறேன். ஆனால் அவர்களை இதுவரை வாழ்க்கையில் நான் சந்தித்தது இல்லை.

இருவரையும் இயக்க தயார்
வருங்காலத்தில் அதிர்ஷ்டம் எனக்கு சாதகமாக இருந்தால் நான் அவர்களை சந்திப்பேன். அவர்கள் என்னுடைய கதையை விரும்பினால் என்னுடைய அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி, தனித்தனியாகவும், இருவரையும் வைத்தும் நல்ல பொழுதுபோக்கு படங்களை இயக்குவேன் என குறிப்பிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

நெட்டிசன்கள் ஆசை இதுதான்
இதை பார்த்த நெட்டிசன்கள், அவர்கள் இருவரையும் சந்திப்பது தான் கடினம். ஆனால் மோகன்லாலை சந்திப்பது உங்களுக்கு எளிது தான். அதனால் அதற்கு முன் மோகன்லால் அல்லது மம்முட்டியை வைத்து படம் இயக்குங்கள். அப்படியே தல-தளபதியை வைத்தும் ஒரு படம் எடுங்கள் சார். கார்த்தி அல்லது சூர்யாவை வைத்து ஒரு படம் பண்ணுங்க. அது பிரேமம் படம் போல் இருக்கட்டும் என தெரிவிதுள்ளனர்.

அட இவர் கூட சொல்லிருக்காரா
நெட்டிசன்கள் மட்டுமல்ல மாஸ்டர் தயாரிப்பாளர் பிரிட்டோ, இவருக்கு அதற்கான முழு தகுதியும் உள்ளது. கார்த்திக் அல்லது லோகேஷ் கனகராஜ் இவரின் இந்த ட்வீட் பற்றி நிச்சயம் ரஜினி மற்றும் கமலிடம் தெரிவிப்பாளர்கள் என நம்புகிறேன் என முதல் ஆளாக கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











