»   »  ஃபஹத் பாசிலை இயக்கப் போகும் 'ப்ரேமம்' பி.டி மாஸ்டர்!

ஃபஹத் பாசிலை இயக்கப் போகும் 'ப்ரேமம்' பி.டி மாஸ்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : 'ப்ரேமம்' படம் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானவர் தான் சௌபின் சாஹிர். அதில் பி.டி மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த சௌபின் ஷாஹிரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

ஆனால் அடிப்படையில் இவர் டைரக்ஷன் டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவர். பாசில், சித்திக், ரபி மெக்கார்டின், அமல் நீரத் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்.

'ப்ரேமம்' படத்தைத் தொடர்ந்து நிறைய படங்களில் காமெடி நடிகராக நடித்தாலும் கூட, தனது இயக்குநர் கனவை மட்டும் அவர் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை.

 பறவ இயக்குநர் :

பறவ இயக்குநர் :

இதனால் நடிப்பு வேலைகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு, படம் இயக்குவதில் தீவிரமாகச் செயல்பட்ட சௌபின் சாஹிர், சமீபத்தில் தான் துல்கர் சல்மானை வைத்து 'பறவ' என்கிற படத்தை இயக்கி வெளியிட்டார்.

 நல்ல வரவேற்பு :

நல்ல வரவேற்பு :

இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கிவிட்டார் சௌபின் சாஹிர். இந்தப்படத்தில் பஹத் பாசில் ஹீரோவாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

 காமெடி நடிகர் :

காமெடி நடிகர் :

கடந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிஹாரம்' படத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்திருந்தார் சௌபின் சாஹிர்.

 அடுத்த படம் :

அடுத்த படம் :

அப்படத்தில் நடிக்கும்போதே ஃபஹத் பாசிலிடம் கதை சொல்லி ஓகே வாங்கியதாகவும் கூறப்படுகிறது. காமெடி நடிகராக அவருடனே நடித்து ஃபகத்தை வைத்து இயக்கவும் போகிறார் சௌபின் சாஹிர்.

English summary
Soubin Shahir, who debuted in the role of P.T Master as a comedy actor through the film 'Premam'. Even though he plays as comedy actor, he is not ready to change his director's dream. Saubin is directing the film 'Parava' with Dhulkar, and now ready to direct fahad fazil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil