»   »  வருகிற வெள்ளிக்கிழமை முதல் "மாங்கா"

வருகிற வெள்ளிக்கிழமை முதல் "மாங்கா"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடித்துள்ள மாங்கா படம் வருகிற 11ம் தேதி திரைக்கு வருகிறதாம்.

இதுவரை காமெடியனாக, என்ன கொடுமை சார் இது என்றும் கலாய்த்து வந்த பிரேம்ஜி இப்போது ஹீரோவாகி விட்டார் மாங்கா படம் மூலமாக.


ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம்தான் மாங்கா.


ஹீரோ அமரன்...

ஹீரோ அமரன்...

இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார். அவர் நாயகனாக நடிக்கும் முதல் படம் இது. அதை விட இதில் அவர் போட்டுள்ள கெட்டப் சேஞ்ச் அனைவரையும் ஏற்கனவே அசர வைத்துள்ளது.


மாங்காவுக்கு 2 ஹீரோயின்...

மாங்காவுக்கு 2 ஹீரோயின்...

இப்படத்தில் மாங்காவுக்கு அதாவது பிரேம்ஜிக்கு 2 நாயகிகள். கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்கிறார்கள். அழகாக இருக்கிறார்கள், பிரேம்ஜிக்குப் பொருத்தமாக பாந்தமாகவும் இருக்கிறார்கள்.


கூடவே இவர்களும்...

கூடவே இவர்களும்...

காமெடியனே ஹீரோவாகி விட்டால் சைடு காமெடியர்க் இன்னும் கலக்கலாக இருக்க வேண்டும் அல்லவா. எனவே இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


இசையும் அமரனே...

இசையும் அமரனே...

படத்தின் ஒளிப்பதிவை செல்வா ஆர்.எஸ். பார்க்க பிரேம்ஜி அமரனே இசையும் அமைத்துள்ளார். எடிட்டிங் வேலையை சுரேஷ் அர்ஸ் கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆர்.எஸ்.ராஜா.


11ம் தேதி முதல்...

11ம் தேதி முதல்...

இப்படத்தின் ஸ்டில்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வருகிற 11ம் தேதி படம் திரைக்கு வருகிறது.


English summary
Actor Premgi's new movie Maanga which is directed by R.S.Raja will be released on 11th of September.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil