»   »  'இனி நீ தமிழில் பாடக்கூடாது... பாடகர் கிருஷ் மீது பாய்ந்த பிரேம்ஜி!

'இனி நீ தமிழில் பாடக்கூடாது... பாடகர் கிருஷ் மீது பாய்ந்த பிரேம்ஜி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Premgi and Girish
ஐபிஎல் இன்னும் என்னென்ன சண்டையை 'வலித்து'க் கொண்டு வருமோ... இந்த முறை இரு கோலிவுட் நட்சத்திரங்கள் மோதிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் பிரபல நடிகர் பிரேம்ஜி மற்றும் பாடகர் கிரிஷ்.

சென்னையை தோற்கடித்து கொல்கத்தா அணி கோப்பையை வென்றதையடுத்து, இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா வீட்டில் ஒரு பார்ட்டி நடந்தது. விடிய விடிய நடந்த இந்த மது விருந்தில் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாரூக்கான், அவர் மனைவி கவுரி, நடிகர் அக்ஷய் குமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமா பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷும் இதில் கலந்து கொண்டு, விருந்துக்கு வந்தவர்களுடன் போஸ் கொடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

இதைப் பார்த்ததும் கோபமடைந்த பிரேம்ஜி, "சென்னை அணியை தோற்கடித்த கொல்கத்தா அணி ஓனர்கூட விருந்தில் கலந்து கொண்டது சரியா... இனி நீ தமிழில் பாடக்கூடாது. போய் கொல்கத்தால பாடித்தான் பிழைக்கணும்," என ட்வீட் செய்தார்.

உடனே கிரிஷ், "டேய்... அது பிரபு தேவா கொடுத்த விருந்துடா... நான் அவர்கூட தான் போட்டோ எடுத்துக்கிட்டேன். அந்த விருந்துக்கு ஷாரூக் வந்திருந்தார் அவ்வளவுதான்," என பதில் கூறியிருந்தார்.

பிரேம்ஜியும் கிரிஷும் நண்பர்களும்கூட. எனவே இந்த ட்விட்டர் சண்டை பற்றிக் கேட்டதற்கு, "எங்களுக்குள் சண்டை எதுவும் இல்லை. பிரேம்ஜியின் கமெண்டை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்றார்.

பிரேம்ஜி கூறுகையில், "சும்மா வாய் சண்டைதான். ஐபிஎல் வேற முடிஞ்சிடுச்சா.. ஒரே போர்.. அதான் கிரிஷை கலாய்ச்சேன்," என்றார் தன் பாணியில்...

English summary
The IPL fever caught on big time with the stars of Kollywood. Now actor Premgi clashed with his friend singer Girish about his presence in the party given by Prabhu Deva and attended by Shahrukh Khan.
Please Wait while comments are loading...