இருக்கு...இல்ல...இருக்கு...மீண்டும் மீண்டும் குழப்பும் பிரேம்ஜி

சென்னை : திருமண விஷயத்தில் அடிக்கடி முடிவை மாற்றி குழப்பி வருகிறார் நடிகர் பிரேம்ஜி. இதனால் சினிமா வட்டாரங்கள், ரசிகர்கள் என அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர். இவர் என்ன தான் சொல்ல வருகிறார் என கேட்டு வருகிறார்கள்.

இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. இசையமைப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களைக் கொண்டவர் பிரேம்ஜி. 42 வயதாகும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறி வந்ததாக கூறப்பட்டது. இருந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து பேசி பிரேம்ஜியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர்.

பிரேம்ஜிக்கு திருமணம்

பிரேம்ஜிக்கு திருமணம்

பிரேம்ஜி ஓகே சொன்னதால் பெண்ணை பார்த்து முடிவு செய்துள்ளனர். விரைவில் பிரேம்ஜிக்கு திருமணம் செய்ய போவதாக கங்கை அமரன் அறிவித்திருந்தார். இதனையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அதற்கு பிறகு பிரேம்ஜியின் திருமணம் பற்றி எந்த தகவலும் இல்லை. சமீபத்தில் பிரேம்ஜி, தனது வாழ்க்கையில் திருமணமே கிடையாது என கூறினார்.

இவன் மட்டும் நிம்மதியா இருக்கான்

இவன் மட்டும் நிம்மதியா இருக்கான்

பிரேம்ஜியின் இந்த அறிவிப்பால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்படியானால் பெண் பார்த்து ஏற்பாடு செய்தது, திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறியது எல்லாம் என்ன ஆயிற்று என அனைவரும் கேட்க துவங்கினர். இதற்கிடையில் பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு, இவன் மட்டும் நிம்மதியாக இருக்கிறான் என சோஷியல் மீடியாவில் கருத்து பதிவிட்டார்.

காதல்...திருமணம் வதந்தி

காதல்...திருமணம் வதந்தி

இந்நிலையில் சமீபத்தில் பாடகி வினய்தா என்பவரை பிரேம்ஜி காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல் பரவியது. பிரேம்ஜியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பாடகி வினய்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, தங்களின் காதலை மறைமுகமாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

 திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை

திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை

இது பற்றி அவரிடம் கேட்ட போது, எனக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை. திருமணம் செய்ய நினைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருப்பேன். என் வாழ்வில் திருமணம், குழந்தை மாதிரியான விஷயங்கள் எதுவும் கிடையாது. என் வாழ்க்கையில் திருமணம் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X