»   »  நாயாக மாறிய பிரேம்ஜி... கொஞ்சப் போவது யாரு?.. இது 'சிம்பா' கலாட்டா!

நாயாக மாறிய பிரேம்ஜி... கொஞ்சப் போவது யாரு?.. இது 'சிம்பா' கலாட்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்பா படத்தில் பரத்தின் தாத்தாவாகவும், சிம்பா என்ற நாயாகவும் பிரேம்ஜி நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிருகங்களை நேசிக்கும் ஒரு பிரபல கதாநாயகி ஒருவர் சிம்பா படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம்

மேஜிக் சேர்என்ற படநிறுவனம் சார்பில் சிவனேஷ்வரன் தயாரிக்க, பரத் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், ‘சிம்பா'. சிம்பா படத்தில் பரத்தின் தாத்தாவாக நடிக்கும் பிரேம்ஜி, சிம்பா என்ற நாயாகவும் நடித்திருக்கிறார்.


தன் முந்தைய படங்களின் கதைக்களத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகள் மனதில் நிற்கும்படியான சவாலான வேடத்தை கொண்ட கதையாக இருந்ததால், ஆர்வத்துடன் சிம்பா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் பிரேம்ஜி.


நாயாக நடிக்கும் பிரேம்ஜி

நாயாக நடிக்கும் பிரேம்ஜி

த லயன் கிங் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர்தான் சிம்பா. அந்தப் பெயரை தன் படத்துக்கு மட்டுமில்லை, படத்தில் பிரேம்ஜி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கும் வைத்திருக்கிறார் இயக்குநர் அர்விந்த் ஸ்ரீதர்.


பவர் ஸ்டார் சீனிவாசன்

பவர் ஸ்டார் சீனிவாசன்

இன்னுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் ரமணா நடித்திருக்கிறார். பவர்ஸ்டார், லொள்ளுசபா ஸ்வாமிநாதன் ஆகியோருடன் சிறப்புத்தோற்றத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு நடித்திருக்கிறார்.


பரத் ஜோடியாக பானு மெஹ்ரா

பரத் ஜோடியாக பானு மெஹ்ரா

பரத் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஜோடியாக தெலுங்கில் வருடு படத்தில் நடித்த பானு மெஹ்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழுக்கு புது வரவு. இவர் பத்திரிகை நிருபராக நடிக்கிறாராம்.


சிம்பா படத்தின் கதை

சிம்பா படத்தின் கதை

தனிமையினால் வாழ்க்கை திசைமாறி கஞ்சாவுக்கு அடிமையாகி, எந்நேரமும் பிரம்மையிலேயே உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும்? இதுதான் சிம்பா படத்தின் ஒருவரிக்கதையாம்.


புதிய கதைக்களம்

புதிய கதைக்களம்

தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத வேறு ஒரு கோணத்தில், வேறு ஒரு தளத்தில் இயங்கும் சிம்பாவின் கதையமைப்பு நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை எல்லையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் என்கிறார் படத்தின் இயக்குநர் அர்விந்த் ஸ்ரீதர்.


தொழில்நுட்ப கலைஞர்கள்

தொழில்நுட்ப கலைஞர்கள்

மலையாளத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் பணியாற்றிய சினு சித்தார்த், சிம்பா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளாராம். இனம், அப்புச்சி கிராமம் போன்ற படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இசையமைக்க, மெட்ராஸ், வி.ஐ.பி படங்களில் பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்த சதீஷ், சிம்பா படத்துக்கு நடனம் அமைத்திருக்கிறார்.


குத்துப்பாடல்

குத்துப்பாடல்

ராம்கோபால்வர்மாவின் அறிமுகமான ஸ்வாதி தீக்ஷித் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் சில முக்கிய காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம்.


சிறப்பு தோற்றத்தில் யார்?

சிறப்பு தோற்றத்தில் யார்?

சிம்பா படத்தில் மிருகங்களை நேசிக்கும் ஒரு பிரபல கதாநாயகி ஒருவர் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். அந்த ஹீரோயின் யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குநர்.


English summary
Bharath and Premgi Amaran playing lead roles in a film titled 'Simba', directed by Aravind Sreedhar. According to sources, the story of 'Simmba' revolves around Bharath, who plays a junkie. "He has hallucinations and the script is from his point of view. Bhanu plays a news reporter and Premgi will be seen in an interesting role," sources said.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil