அமலா பால் நீங்க ரொம்ப அழகு.. வர்ணித்த மாஸ்டர் பட ஹீரோயின்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

சென்னை: அமலா பால் ரொம்ப அழகு என மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் வர்ணித்துள்ளார்.

Recommended Video

ரெண்டாவது கல்யாணத்திலும் சிக்கலா? அமலா பால் ஷேர் செய்த மீம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என தளபதி ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், கொரோனா பாதிப்பால், ஜூன் மாதத்துக்கு மாஸ்டர் தள்ளிப் போயுள்ளது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

அமலா பாலுக்கும் அவரது பாய் ஃபிரெண்ட் பவிந்தர் சிங்குக்கும் இரண்டாவது திருமணம் நடந்ததாக புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இதுவரை திருமணம் குறித்த எந்தவொரு தகவலையும் நடிகை அமலா பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இரண்டாவது திருமணத்திலும் சிக்கலா? என்ற கேள்விகளும் அதனால் எழுந்துள்ளன.

பூவின் வாசம்

பூனை உடன் விளையாடும் வீடியோ வெளியிட்டு வைரலாக்கிய நிலையில், தற்போது, பூ வாசம் குறித்த சித்தாந்த ட்வீட்டை நடிகை அமலா பால் பதிவிட்டுள்ளார். பூவின் வாசத்தை சிலர் புரிந்து கொள்வதில்லை என்றும், நாற்றம் என்று சிலர் ஒதுங்குவதாகவும் பல உள்ளடக்க கருத்துக்களை அந்த பதிவு கொண்டிருக்கிறது.

ரொம்ப அழகு

ரொம்ப அழகு

அமலா பால் மறைமுகமாக எதையோ சொல்ல வருவதை உணர்ந்து கொண்ட மாஸ்டர் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன், Pretty Woman என அமலா பாலை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளார். அமலா பால் பதிவிட்டுள்ள இந்த பதிவு இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

விஜய்யுடன்

விஜய்யுடன்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் அமலா பால் நடித்திருந்தார். படத்தின் டைட்டிலுக்காகவே பல பிரச்சனைகளை சந்தித்த அந்த படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக திகழ்கிறது. விஜய்யும் அமலா பாலும் ஆடும் டான்ஸ் காட்சிகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்.

ஸ்ரீரெட்டி ஆதரவு

ஸ்ரீரெட்டி ஆதரவு

மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனுக்கு முன்னதாக நடிகை அமலா பாலுக்கு ஸ்ரீரெட்டி ஆதரவு தெரிவித்து பதிவிட்டு இருந்தார். ஸ்ரீரெட்டியின் பதிவில், உங்க கணவர் உங்களை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வார். எதற்கும் கவலை படாதீங்க என பதிவிட்டு இருந்தார். அமலா பாலுக்கு அப்படி என்னதான் பிரச்சனை என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் புலம்பி தவிக்கின்றனர்.

ஆடை படத்துக்கு விருது

ஆடை படத்துக்கு விருது

மேயாத மான் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த ஆடை படத்திற்கு, தமிழ் சினிமாவில் வரவேற்பும் விருதுகளும் பெரியளவில் கிடைக்காத நிலையில், கேரளாவில் உள்ள திரைப்பட விமர்சகர்கள் கில்டு, ஆடை படத்தில் நடித்ததற்காக அமலா பாலுக்கு சிறந்த நடிகைக்கான விருதினை வழங்கியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X