»   »  பொங்கல் படங்கள்... ஒரு முன்னோட்டம்

பொங்கல் படங்கள்... ஒரு முன்னோட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தப் பொங்கலுக்கு எத்தனை படங்கள் வரும் என்று கணித்து செய்திகள் எழுதிய கதையையே தனி கட்டுரையாகத் தரலாம்.

இந்தப் படம் நிச்சயம், அந்தப் படம் நிச்சயம், இதோ தியேட்டர்கள்... என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதை நம்பி எழுதி செய்தி வெளியிட்ட சூட்டோடு படத்தின் மீது வழக்கு வந்திருக்கும், அல்லது ரிலீஸ் தள்ளிப் போயிருக்கும்.

தள்ளிப் போனது

தள்ளிப் போனது

பொங்கலுக்கு நிச்சயம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட அஜீத்தின் என்னை அறிந்தால் படம் திடீரென மாத இறுதிக்குத் தள்ளிப் போனது.

இந்த நிலையில் ஐ, ஆம்பள என இரு படங்கள் மட்டுமே பொங்கலுக்கு போட்டியில் நின்றன. உடனே சட்டென்று ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் படம் களத்தில் குதித்தது.

இன்றைக்கு ஐ வெளியாகிவிட்டது. ஆம்பளயும் டார்லிங்கும் நாளை வெளியாகின்றன.

ஐ

இந்தப் படம் குறித்து ஏகப்பட்ட செய்திகளை வெளியிட்டுவிட்டோம். ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்- எமி ஜாக்ஸன், சந்தானம் நடிப்பில் வெளியாகும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம், ஷங்கர் இருவருக்குமே இந்தப் படம் வெற்றி பெறுவது முக்கியமாக உள்ளது.

ஆம்பள

ஆம்பள

விஷால் - ஹன்சிகா, சந்தானம் நடிப்பில், சுந்தர் சி இயக்கியுள்ள ஜனரஞ்சகப் படம் ஆம்பள. படம் தொடங்கும்போதே, இது பொங்கல் ரிலீஸ் என்று தில்லாக அறிவித்துவிட்டு, அதற்கேற்ப கச்சிதமாக முடித்தவர்கள் விஷாலும் சுந்தர் சியும்.

எந்தப் படம் வந்தாலும் வராவிட்டாலும் என் படம் பொங்கலுக்கு நிச்சயம் என்பதில் உறுதியாக இருந்தார் விஷால். அதனால் அவர் கேட்ட தியேட்டர்கள் கிடைத்துள்ளன. திடீரென கடைசி நேரத்தில் படத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டதால் கோலிவுட் பரபரத்தது. ஆனால் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.

ஹிப் ஆப் ஆதி இசையமைத்துள்ளார். விஷால் தயாரித்துள்ளார். நாளை பொங்கலன்று படம் வெளியாகிறது.

டார்லிங்

டார்லிங்

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் இந்த டார்லிங். இதற்கு முன் பென்சில் படத்திலேயே நாயகனாக நடித்திருந்தாலும், ஜிவி நடிந்த இந்தப் படம்தான் முதலில் வெளியாகிறது.

அவரே படத்துக்கு இசையமைத்துள்ளார். இது ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக். தமிழ் சினிமாவின் இப்போதைய ட்ரெண்டான பேய்க் கதையை வைத்து எடுத்துள்ளனர். எல்லாரையும் காப்பாற்றிய பேய் தன்னையும் காப்பாற்றும் என நம்புகிறார்.

English summary
Here is the preview of Pongal releases I, Aambala, Darling.
Please Wait while comments are loading...