twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “அருமை, நல்ல முயற்சி”.. கூலி நம்பர் 1 படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி.. எதற்காகத் தெரியுமா?

    படப்பிடிப்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்ததற்காக கூலி நம்பர் 1 படக்குழுவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

    |

    சென்னை: படப்பிடிப்பின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாததற்காக கூலி நம்பர் 1 படக்குழுவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

    இந்தியில் கோவிந்தா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கூலி நம்பர் 1. இப்படம் இந்தியில் மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் கோவிந்தா நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்கிறார்.

    கூலி நம்பர் 1 ரீமேக் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஹீரோயின் ஜாக்கி பக்நானி, வருணுக்கு பிளாஸ்டிக் அல்லாத ஒரு தண்ணீர் பாட்டிலை பரிசளித்தார்.

    யார் இது? அசினுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. செம அதிர்ச்சி!யார் இது? அசினுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. செம அதிர்ச்சி!

    நல்ல முடிவு

    நல்ல முடிவு

    இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் மறுசுழற்றி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு புகைப்படத்தை சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் வருண் தவான்.

    வைரலானது

    வைரலானது

    இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த தகவல் சமூகவலைதளத்தில் வைரலானது. திரைத் துறையினரின் இந்த முயற்சி நிச்சயம் பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூலி நம்பர் ஒன் படக்குழுவை நெட்டிசன்கள் பாராட்டி பதிவுகள் வெளியிட்டனர். இந்தத் தகவல் பிரதமர் மோடி கவனத்திற்கும் சென்றுள்ளது.

    மோடி பாராட்டு

    அதனைத் தொடர்ந்து கூலி நம்பர் 1 படக்குழுவின் இந்த நல்ல நடவடிக்கையை வெகுவாக பாராட்டி டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "கூலி நம்பர் 1 படக்குழுவின் இந்த முடிவு அருமையானது. மறுசுழற்றி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை இந்தியாவில் இருந்து ஒழிக்க திரைத்துறையினரும் தங்களுடைய பங்களிப்பை கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது", என குறிப்பிட்டுள்ளார்.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    பிரதமரின் இந்த பாராட்டால் கூலி நம்பர் 1 படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிக்க அவர்கள் உறுதி பூண்டுள்ளனர். கூலி நம்பர் 1 படக்குழுவின் இந்த கொள்கையை மற்ற படக்குழுக்களும், திரை நட்சத்திரங்களும் கையில் எடுத்தால், நிச்சயம் அவர்களது ரசிகர்களும் அதனைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். மாற்றம் எளிதில் வசமாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை.

    English summary
    Prime Minister Narendra Modi has praised the Coolie No. 1 movie team for deciding to go plastic-free on the sets of the upcoming remake.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X