Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிரின்ஸ் படம் 12 கோடி நஷ்டம்.. அடக்கொடுமையே.. சிவகார்த்திகேயன் கொடுத்த இழப்பீடு எவ்வளவு தெரியுமா?
சென்னை : பிரின்ஸ் திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் அடைந்த விநியோகஸ்தருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இழப்பீடு கொடுத்துள்ளார்.
தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் . இவருக்கு கடந்த ஆண்டு தொடக்கமே ஒரு நல்ல ஆண்டாகவே இருந்தது. டாக்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து 100 கோடி கிளப்பில் இணைந்தது.
இதையடுத்து, சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை வாரிக்குவித்தது.
கழுத்தை நெறிக்கும் கடன்... மாவீரன் படத்துக்கு வந்த சிக்கல்...?: அப்செட்டான சிவகார்த்திகேயன்!

பிரின்ஸ்
டான், டாக்டர் என இரண்டு படங்களும் கொடுத்த உத்வேகத்துடன், பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. அப்படத்தில் சிவகார்த்திகேயன் ஆசிரியராக நடித்திருந்தார். மரியா ரியா போஷப்கா, சத்யராஜ், சூரி, பிரேம்ஜி, ஆனந்த் ராஜ்,விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

காதல் கதை தான்
ஜாதி, மதத்தை விட மனித நேயம்தான் முக்கியம் என்று கொள்கை கொண்டவர் சத்யராஜ். இவருடைய மகன் சிவகார்த்திகேயன். அவர் புதுச்சேரியில் உள்ள பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளிக்கு ஆசிரியராக வரும் ஜெசிகாவை காதலிக்கிறார். ஜெசிகா பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் என்பதால் மகனின் காதலை ஏற்க மறுக்கிறார் சத்யராஜ். ஜெசிகாவின் தந்தையும் இவர்களின் காதலை ஏற்கவில்லை. இறுதியில் இவர்களின் காதல் கைகூடியதா இல்லையா என்பது தான் பிரின்ஸ் படத்தின் கதை.

புலம்பிய ரசிகர்கள்
காமெடியை மையமாக வைத்து உருவான இப்படத்தில் பல இடங்களில் சிரிப்பே வரவில்லை என ரசிகர்கள் புலம்பினர். டாக்டர், டான் படத்தை போல இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரின்ஸ் படம் வேறும் 35 முதல் 40 கோடி வரை வசூலித்து படு தோல்வியை சந்தித்தது.

புலம்பிய ரசிகர்கள்
காமெடியை மையமாக வைத்து உருவான இப்படத்தில் பல இடங்களில் சிரிப்பே வரவில்லை என ரசிகர்கள் புலம்பினார். டாக்டர், டான் படத்தை போல இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரின்ஸ் படம் வேறும் 35 முதல் 40 கோடி வரை வசூலித்து படு தோல்வியை சந்தித்தது.

நஷ்ட ஈடு கொடுத்த சிவகார்த்திகேயன்
இந்நிலையில், பிரின்ஸ் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் 3 கோடி ரூபாயும், பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 3 கோடி ரூபாயும் மொத்தம் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக பட விநியோகஸ்தர் அன்புசெழியனுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த படத்தில் கவனத்துடன்
பிரின்ஸ் திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் பிரின்ஸ் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து சிவகார்த்திகேயனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், தனது அடுத்த திரைப்படமான அயலான் படத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார். இப்படத்தில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

மாவீரன்
இந்தப் படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தெலுங்கில் மாவீருடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூனிஸ்ட் ஆக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.