twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிஸ்டர் லோக்கல் 2வா? பிரின்ஸ் படத்தை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

    |

    சென்னை: ஜதி ரத்னலு படத்தை இயக்கி ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர் இயக்குநர் அனுதீப்.

    அப்படியொருவர் இயக்கத்தில் நாமும் நடிப்போமே என நினைத்த சிவகார்த்திகேயன் அவருக்கு ஓகே சொல்ல பிரின்ஸ் என்கிற டைட்டிலில் ஃபன் கலந்த படத்தை இயக்கி இந்த தீபாவளிக்கு வெளியிட்டுள்ளனர்.

    டாக்டர், டான் படங்களில் ஏகப்பட்ட வெரைட்டிகளை காட்டிய சிவகார்த்திகேயனை வைத்து ரொம்பவே சிம்பிளாக ஒரு லைட் ஹார்டட் படம் வெளியாகி உள்ள நிலையில், நெட்டிசன்கள் அந்த படத்திற்கு என்ன விமர்சனம் கொடுத்துள்ளனர் என்பதை இங்கே பார்ப்போம்..

    Prince Review: பக்கா காமெடி படமா? க்ரிஞ்ச் படமா? சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் விமர்சனம் இதோ! Prince Review: பக்கா காமெடி படமா? க்ரிஞ்ச் படமா? சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் விமர்சனம் இதோ!

    ஃபன் ரைடு

    ஃபன் ரைடு

    சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் நல்லா ஆரம்பித்து போய்க் கொண்டிருக்கிறது. முதல் பாதி முழுவதும் காமெடி டைமிங் பக்காவா இருக்கு. வில்லனே காமெடி பண்ணும் இடங்கள் செம கலகலப்பு. நீங்க கேம்ப்ரிட்ஜ ஜப்பான்ல தேடுறீங்க என சொல்லும் காட்சிகள் எல்லாம் தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.

    கலக்கப் போவது யாரு

    கலக்கப் போவது யாரு

    ஹை பட்ஜெட் கலக்கப் போவது யாரு தான் இந்த பிரின்ஸ். ஜதி ரத்னலு படத்தில் எவ்ளோ ஸ்க்ரிப்ட் வொர்க், கிராஃப்ட் வொர்க் இருக்கும். எதுவுமே இல்லாமல், ஸ்கூல் பசங்க பண்ணுகிற ஸ்கிட் மாதிரி இருக்கு இந்த பிரின்ஸ் படம். நேரம், பணம் எல்லாமே தண்டச் செலவு, இப்படியொரு கதைக்கு சிவகார்த்திகேயன் தான் கரெக்ட் என நினைத்து விட்டாரோ அனுதீப்.. ரொம்பவே ஏமாற்றம் என இந்த நெட்டிசன் கிழித்துத் தொங்க விட்டுள்ளார்.

    டாக்டர் படத்தை போல

    டாக்டர் படத்தை போல

    டாக்டர் படத்திற்கு பிறகு மீண்டும் வித்தியாசமான ஒரு கதையை தேர்வு செய்து சிறப்பாகவே சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சாதாரண கதையை எடுத்துக் கொண்டு அதை காமெடி படமாக கொடுக்க முடியும் என தனது எழுத்தால் நிரூபித்துள்ளார் இயக்குநர் அனுதீப். ஜாலியாக பார்க்கும் படம், பெரிய விஷயங்களை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

    ஜெஸிகா சூப்பர்

    ஜெஸிகா சூப்பர்

    சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் அசத்த, மறுபக்கம் அறிமுக நாயகி மரியா ஜெஸிகா கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளார். சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பிம்பிலிக்கா பிலாப்பி பாடலுக்கு அவர் ஆடிய நடனம் எல்லாம் அசத்தல். பெரிய திரைக்கதை எல்லாம் இல்லை. ஒரு முறை ஜாலியாக பார்க்கலாம். 5க்கு 3 ரேட்டிங் தருகிறேன் என இந்த ரசிகர் ரேட்டிங் எல்லாம் கொடுத்துள்ளார்.

    குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

    குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

    பிரின்ஸ் படம் ஃபிளாப் என்று சொல்ல முடியாது. குடும்பத்துடன் இந்த தீபாவளிக்கு தியேட்டருக்கு சென்று ஜாலியாக பார்க்கலாம். படக்குழுவும் அதை மனதில் வைத்தே எடுத்துள்ளது தெளிவாக தெரிகிறது என இந்த நெட்டிசன் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

    மிஸ்டர் லோக்கல் 2

    மிஸ்டர் லோக்கல் 2

    ரைட்டு ரிசல்ட் வந்துடுச்சி என இந்த நெட்டிசன் பிரின்ஸ் படம் மிஸ்டர் லோக்கல் 2 என பங்கமாக விமர்சித்துள்ளார். தியேட்டரில் சென்று பார்த்தவர்களுக்கு படம் ரொம்பவே பிடித்திருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் சிவகார்த்திகேயனுக்கு எதிரான நெகட்டிவிட்டி பரப்பப்படுகிறது என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் எப்படி இருக்கு என்றால்? இதுக்கு முன்னாடி இது போல பல படங்கள் வந்து இருக்கு..ஆனால், இது தான் க்ரிஞ்ச் என கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Prince Twitter Review: Sivakarthikeyan fans praises the movie but some netizens trolls Prince is a Mr Local part 2 in social media. Director Anudeep KV's fun treatment didn't work well overall as a movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X