»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில காலத்துக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷா நடித்த கடைசிப் படமான நதி விரைவில்வெளியாக உள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை பிரதியுஷா பாரதிராஜாவின் கடல் பூக்கள் மூலம் தமிழில் அறிமுகமாகி விஜயகாந்த்,சத்யராஜ், பிரபு, முரளி போன்றோருடன் நடித்தார்.

முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தன. தமிழில் பிரதியுஷா நடித்துக் கொண்டிருந்தகடைசிப் படம் நதி.

இந்தப் படத்தில் சில முக்கியமான காட்சிகளில் அவர் நடிக்க வேண்டியிருந்தது. திடீரென்று அவர் தற்கொலைசெய்து கொண்டதால் படம் பாதியில் நின்று போனது. தற்போது திரைக் கதையில் சில மாற்றங்கள் செய்து படத்தைமுடித்துள்ளார்கள்.

படத்தின் முடிவில் கற்பழிக்கப்பட்டு, பிரதியுஷா தற்கொலை செய்து கொள்வது போல கதையைமாற்றிவிட்டார்களாம்.

தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. செப்டம்பர் மாத இறுதியில் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil