twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவால் முடங்கிய சினிமா.. தொழிலாளர்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி அளித்த ப்ருத்விராஜ்

    |

    கொச்சி : கொரோனா வைரசால் சினிமாத்துறை முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. இதற்கிடையில் சினிமா துறையை சேர்ந்த பலரும் கொரோனாவால் தினம் தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    Prithviraj donates a huge sum for technicians

    இந்நிலையில் கேரளா சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் உன்னிகிருஷ்ணன், பேஸ்புக்கில் நடிகர் ப்ருத்விராஜிற்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மருத்துவ செலவு உள்ளிட்ட உதவிகளை மேற்கொள்ள ரூ.3 லட்சத்தை ப்ருத்விராஜ் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தை தயாரித்த பிலிபோஸ் கே ஜோசப், சினிமா தொழிலாளர்கள் நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சத்தை வழங்கினார். அனூப் மேனனும் ரூ.1 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

    தோஹா ஏர்போர்ட்டில் படையப்பா ஸ்டைலில் ரசிகருக்கு ராயல் சல்யூட் அடித்த ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்! தோஹா ஏர்போர்ட்டில் படையப்பா ஸ்டைலில் ரசிகருக்கு ராயல் சல்யூட் அடித்த ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்!

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் கேரளா சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் 19 சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உதவ நிதி திரட்டப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. பெறப்படும் நிதியை கொண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 வழங்க கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

    உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிதி அளித்துள்ள நடிகர்களுக்கு கேரள சினிமா டைரடர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

    English summary
    FEFKA’s (Film Employees Federation of Kerala) General Secretary B Unnikrishnan took to Facebook to thank actor-filmmaker Prithviraj for contributing a sum of rupees 300000 to the union's COVID-19 relief fund.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X