பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் இணைந்த பிருத்விராஜ்… மிரட்டலான போஸ்டருடன் அசத்தல் அப்டேட்

ஐதராபாத்: 'கேஜிஎஃப்' மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல்.

அதேபோல், 'பாகுபலி' படத்திற்குப் பின்னர் பான் இந்தியா ஸ்டாராக ஜொலித்து வருகிறார் பிரபாஸ்.

இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகி வரும் 'சலார்' படத்தில் மலையாள டாப் ஹீரோ ஒருவரும் இனைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.

கேஜிஎஃப் ராக்கி பாய்

கேஜிஎஃப் ராக்கி பாய்

கேங்ஸ்டர் படங்களுக்கான மரபுகளை உடைத்தெறிந்ததோடு, இந்தியத் திரையுலகையே புரட்டிப் போட்டது 'கேஜிஎஃப்' திரைப்படம். 'உக்ரம்' சினிமா மூலம் இயக்குநராக அறிமுகமான பிரசாந்த் நீல், அடுத்ததாக 'கேஜிஎஃப்' படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ராக்கி பாய் என்ற கேரக்டரை வைத்துக்கொண்டு சினிமா ரசிகர்களை பங்கமாக மிரட்டினார் பிரசாந்த் நீல். இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎஃப், இந்தியத் திரையிலகில் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தியது, பாக்ஸ் ஆஃபிஸில் ஆயிரம் கோடிகளுக்கும் மேல் வசூலித்து பிரமிக்க வைத்தது.

பிரபாஸுடன் கூட்டணி

பிரபாஸுடன் கூட்டணி

'கேஜிஎஃப்' படத்தின் 3ம் பாகமும் விரைவில் உருவாகும் என தெரிகிறது. இந்நிலையில், பாகுபலி படத்திற்குப் பின்னர் பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்படும் பிரபாஸுடன் கூட்டணி வைத்துள்ளார் பிரசாந்த் நீல். 'சலார்' என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படம், 'கேஜிஎஃப்'ஐ விட இன்னும் பிரமாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தான், சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சலார் படத்தில் மலையாள டாப் ஹீரோ பிருத்விராஜும் இணைந்துள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.

வரதராஜ மன்னார்

வரதராஜ மன்னார்

மலையாளத்தில் முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல், 'லூசிபர்' என மெகா ஹிட் படத்தை இயக்கி அனைவரையும் வியக்க வைத்தவர் பிருத்விராஜ். இவர் தற்போது சலார் படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே பிருத்விராஜ் தான் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது அதனை இயக்குநர் பிரசாந்த் நீல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிருத்விராஜ்ஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மிரட்டலான போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், வரதராஜ மன்னார் என்ற கேரக்டரில் பிருத்விராஜ் நடிப்பதையும் பிரசாந்த் நீல் அறிவித்துள்ளார். இந்த அப்டேட் சலார் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சலார் ரிலீஸ்

சலார் ரிலீஸ்

'சலார்' படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. அதன்படி, இந்தப் படம் 2023 செப்டம்பர் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை பிரபாஸின் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், இப்போது பிருத்விராஜ்ஜும் இணைந்துள்ளது செம்ம மாஸ் அப்டேட்டாக அமைந்துள்ளது. ஃபுல் ஆக்சன் மோடில் இருக்கும் பிருத்விராஜ்ஜின் மிரட்டலான போஸ்டரை, அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X