»   »  பாகுபலிக்குப் போட்டியாக மலையாளத்தில் உருவாகும் 'கர்ணன்'

பாகுபலிக்குப் போட்டியாக மலையாளத்தில் உருவாகும் 'கர்ணன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தெலுங்கு தேசத்தில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற பாகுபலி படத்திற்குப் போட்டியாக மலையாளத்தில் கர்ணன் திரைப்படத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.விமல்.

இதன் மூலம் இதுவரை எதார்த்த சினிமாக்களை எடுத்து வந்த மலையாள உலகமும் தற்போது பிரமாண்ட பாய்ச்சலுக்குத் தயாராகி விட்டது.

மலையாள நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான பிருத்விராஜ் இந்தப் படத்தில் கர்ணன் வேடத்தில் நடிக்கிறார்.

மலையாள சினிமா

மலையாள சினிமா

தமிழ், தெலுங்குப் படங்களை போல பணத்தை வாரியிறைக்காமல் குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை கொடுப்பதில் மலையாளப் படங்களுக்கு நிகரில்லை என்றே கூறலாம். சமீபகாலமாக மலையாள மொழியில் வெளியான படங்கள் அனைத்துமே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகின்றன.பாபநாசம், பிரேமம் மற்றும் பெங்களூர் டேஸ் என்று இதற்கு பல்வேறு படங்களை உதாரணமாக கூறலாம்.

தமிழ், தெலுங்கில்

தமிழ், தெலுங்கில்

இதுநாள்வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தான் அதிகளவில் எந்திரன்,பாகுபலி என்று பிரமாண்டமான படங்கள் உருவாகி வந்தன.தற்போது இந்த வரிசையில் மலையாளத் திரையுலகமும் இணைந்து கொள்ளவிருக்கிறது.

கர்ணன்

கர்ணன்

மகாபாரதத்தில் இருந்து கர்ணன் கதாபாத்திரத்தை கையில் எடுத்து பிருத்விராஜை கர்ணனாக மாற்றியிருக்கிறார் ஆர்.எஸ்.விமல். கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற என்னு நிண்டே மொய்தீன் படத்தில் பிருத்விராஜ் - விமல் கூட்டணி ஏற்கனவே இணைந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் பிரமாண்டம்

முதல் பிரமாண்டம்

சுமார் 45 கோடி பொருட்செலவில் உருவாகும் கர்ணன் மலையாளத்தின் முதல் பிரமாண்ட சினிமா என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் விமல் இதுகுறித்து கூறும்போது "மகாபாரத கர்ணன் கதையைத் தான் படமாக எடுக்கிறேன். பாகுபலியும் நான் எடுக்கப் போகும் கர்ணன் திரைப்படமும் வேறு, வேறு கதைக்களம் என்றாலும் பாகுபலிக்கு எந்தவிதத்திலும் இப்படம் குறைவாக இருக்காது" என்று தெரிவித்திருக்கிறார்.பாகுபலிக்கு ஒளிப்பதிவு செய்த செந்தில்குமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

கடந்த பொங்கல் தினத்தில் துபாயில் வைத்து படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு போர்க்கள காட்சியின் பின்னணியில் பிருத்விராஜ் குதிரைகள் பூட்டிய ரதத்தில் நிற்பது போன்று இந்த பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

தமிழில்

தமிழில்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் ஏற்கனவே தமிழில் கர்ணன் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி மற்றும் கர்ணன் சாதனைகளை பிருத்விராஜின் இந்த புது கர்ணன் முறியடிக்குமா? பார்க்கலாம்.

English summary
Prithviraj's Karnan First look Launched on January 15 in Dubai. Sources Said it is the Very Costliest film in Malayalam till Date.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil