»   »  ரூ. 3 கோடி காருக்கு ரூ. 7 லட்சத்திற்கு பதிவு எண் வாங்கிய சூப்பர் நடிகர்

ரூ. 3 கோடி காருக்கு ரூ. 7 லட்சத்திற்கு பதிவு எண் வாங்கிய சூப்பர் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
7 லட்சத்திற்கு பதிவு எண் வாங்கிய ப்ரித்விராஜ்!- வீடியோ

கொச்சி: லம்போர்கினி கார் வாங்கிய நடிகர் ப்ரித்விராஜ் ரூ. 7 லட்சம் கொடுத்து ஃபேன்ஸி பதிவு எண்ணை வாங்கியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ப்ரித்விராஜ். அழகான வில்லனாக கோலிவுட்டில் அறிமுகமாகி ஹீரோவானவர். அவர் தற்போது நடிகர் மட்டும் அல்ல தயாரிப்பாளரும் கூட.

புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

 ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். கடந்த ஆண்டு இறுதியில் அவர் ரூ. 3 .25 கோடி மதிப்புள்ள லம்போர்கினி ஹுரகன் காரை வாங்கினார்.

 பேன்ஸி எண்

பேன்ஸி எண்

லம்போர்கினி ஆடம்பர காருக்கு பேன்ஸி பதிவு எண்ணை வாங்க முடிவு செய்தார் ப்ரித்வி. கே.எல்.7 சி.என்.1 என்ற எண் வேண்டும் என்று அவர் கேட்க அதே எண் தான் வேண்டும் என மேலும் 4 பேர் கேட்டனர்.

எர்ணாகுளம்

எர்ணாகுளம்

5 பேர் ஒரே எண்ணை கேட்டதால் எர்ணாகுளம் ஆர்.டி.ஓ. அந்த எண்ணை ஏலத்தில் விட்டார். ஆரம்ப விலை ரூ. 10 ஆயிரமாக இருந்தது. இறுதியில் அந்த எண் ப்ரித்விராஜுக்கு தான் கிடைத்தது.

அடேங்கப்பா

அடேங்கப்பா

பேன்ஸி எண்ணை பெற ப்ரித்விராஜ் ரூ. 7 லட்சம் கொடுத்துள்ளார். ஒரு பதிவு எண்ணை ரூ. 7 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்த ப்ரித்விராஜை ரசிகர்கள் வியந்து பார்க்கிறார்கள்.

Read more about: prithviraj kerala கேரளா
English summary
Actor cum producer Prithviraj has spent Rs. 7 lakh for a fancy registration number for his Lamborghini Huracan supercar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil