twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அய்யப்பனும் கோஷியும் இயக்குநரின் 2ம் ஆண்டு நினைவு நாள்.. அதே மன வலியுடன் நடிகர் பிருத்விராஜ்

    |

    திருவனந்தபுரம்: அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குநர் சச்சிதானந்தம் எனும் சச்சி கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

    அந்த படத்தில் நடித்த மலையாள நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

    சச்சியின் எதிர்பாராத திடீர் மரணம் ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் உலுக்கி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    தயாராப்பாளராகும் லோகேஷ் கனகராஜ்? எந்தப் படத்துக்கு தெரியுமா.. விரைவில் அறிவிப்பு! தயாராப்பாளராகும் லோகேஷ் கனகராஜ்? எந்தப் படத்துக்கு தெரியுமா.. விரைவில் அறிவிப்பு!

    எழுத்தாளரும் இயக்குநரும்

    எழுத்தாளரும் இயக்குநரும்

    சச்சிதானந்தம் என்கிற முழுப் பெயரை சுருக்கி சச்சி என செல்லமாக அவரை மலையாள திரையுலகினர் அழைத்து வந்தனர். இயக்குநராக ஆவதற்கு முன்பாக பல வெற்றி படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார் சச்சி. மோகன்லால் மற்றும் அமலா பால் நடிப்பில் வெளியான ரன் பேபி ரன் ஸ்க்ரிப்ட்டுக்காக சச்சி ரொம்பவே பாராட்டப்பட்டார். 2015ம் ஆண்டு பிருத்விராஜ் நடிப்பில் வெளியான அனார்கலி படம் தான் சச்சி இயக்கிய முதல் படம்.

    அய்யப்பனும் கோஷியும்

    அய்யப்பனும் கோஷியும்

    2020ம் ஆண்டு மீண்டும் பிருத்விராஜ் உடன் இணைந்து அவர் இயக்கிய அய்யப்பனும் கோஷியும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தெலுங்கில் பவன் கல்யாண், ராணா டகுபதி நடிப்பில் பீம்லா நாயக் என ரீமேக் செய்யப்படது. பாலிவுட்டில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் மலையாளத்தில் நடிப்பில் வெளுத்து வாங்கி இருப்பார்கள்.

    திடீர் மரணம்

    திடீர் மரணம்

    47 வயதே ஆன இயக்குநர் சச்சி அய்யப்பனும் கோஷியும் வெளியான சில மாதங்களிலேயே மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. பிருத்விராஜ், பிஜு மேனன் எல்லாம் அந்த செய்தி அறிந்ததுமே அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரது இறுதி சடங்கிலும் பங்கேற்றனர்.

    இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

    இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

    ஜூன் 18, 2020ம் ஆண்டு சச்சி உயிரிழந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. மலையாள திரை உலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவரை நினைத்து அவரது நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். அய்யப்பனும் கோஷியும் மாதிரி இன்னும் பல படங்களை கொடுத்திருக்க வேண்டிய கலை பொக்கிஷம் நம்மை விட்டு சீக்கிரத்திலேயே பிரிந்து விட்டதே என மனம் வாடி வருகின்றனர்.

    மறக்காத பிருத்விராஜ்

    மறக்காத பிருத்விராஜ்

    இயக்குநர் சச்சி இயக்கிய இரு படங்களிலும் ஹீரோவாக நடித்த பிருத்விராஜால் எப்படி அவ்வளவு எளிதாக அவரது இழப்பை மறக்க முடியும். உடைந்த இதயத்தின் எமோஜியை பதிவிட்டு அய்யப்பனும் கோஷியும் படப்பிடிப்பின் போது சச்சி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். வரும் ஜூன் 30ம் தேதி பிருத்விராஜின் கொடுவா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Malayalam actor Prithviraj Sukumaran remembers Ayyappanum Koshiyum director Sachy on his second death anniversary, he shares a broken heart emoji with Ayyappanum Koshiyum working still.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X