»   »  ‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் தனியார் பள்ளிகள்!

‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் தனியார் பள்ளிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான 'பென்சில்' திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.

தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது.


Private Schools try to ban Pencil movie

இப்படி ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் 'பென்சில்'.


இதுமட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது என தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றனவாம்.


Private Schools try to ban Pencil movie

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயத்தை அழுத்தமாகச் சொல்கிறதாம் படம். இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில்தான் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டை உடைக்கிறது இந்தப் படம்.


Private Schools try to ban Pencil movie

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்றுதிரட்டி படத்திற்குத் தடைவிதிக்க ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.


Private Schools try to ban Pencil movie

English summary
Some private schools are planning to ban GV Prakash starrer Pencil movie due to the movie's content exposing their malpractices.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil