ஐ லவ் யூ புருஷா.. கணவரின் பிறந்த நாளில் அழகாக வாழ்த்து சொன்ன... பிரியா அட்லீ!
சென்னை: இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பாலிவுட்டிலும் மோஸ்ட் வான்டட் இயக்குனராக மாறி இருக்கிறார். மும்பையில் மாஸ் காட்டி வரும் அட்லீ தற்போது அல்லு அர்ஜுனை வைத்து 600 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் அட்லீயின் பிறந்த நாளுக்கு ப்ரீயா க்யூட்டாக வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த ஷங்கரின் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. அவரிடம் வேலையை கற்றுக்கொண்ட அட்லீ, அதன் பின் இயக்குநராக அறிமுகமாக, தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து இன்று முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இவர் ஆர்யா, நயன்தாரா, ஜெய்யை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியடைய பிறகு விஜய்யின் மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.

இயக்குநர் அட்லீ: தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவித்த அட்லீக்கு பாலிவுட் ஆசைவர, பாலிவுட் கிங் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அட்லீ காப்பி அடித்து படத்தை எடுக்கிறார் காப்பி இயக்குநர் என பல விமர்சனங்கள் வந்தாலும். அவர் இயக்கும் படத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜவான் படத்தின் மொத்த காட்சியும் காப்பி என சர்ச்சை எழுந்தாலும், படம் மாபெரும் ஹிட் அடித்து வசூலில் மிகப்பெரிய அளவில் கல்லா கட்டியது.
மகத்தான வெற்றி: ஜவான் படத்தின் மகத்தான வெற்றியால் பாலிவுட்டில் கடைவிரித்து இருக்கும் அட்லீ தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்து பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டார். அட்லீ, ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றன. காளீஸ் இயக்கினார். இந்த படத்தின் கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் படம் வெளியாகி அட்லீக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. தற்போது அட்லீ அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஐ லவ் யூ புருஷா: இந்நிலையில், அட்லீயின் பிறந்த நாளுக்கு ப்ரியா அட்லீ க்யூட்டாக வாழ்த்து கூறி, இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என் இதயத்திற்கும், என் அமைதிக்கும், என் பலத்திற்கும், என் அனைத்துமாய் இருக்கும் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களை என்னுடையது என்று நிகைக்கும் போது, நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அன்பு, சிரிப்பு மற்றும் எங்கள் விலைமதிப்பற்ற சிறு பையன் நிறைந்த வாழ்க்கையை நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் அற்புதமான தந்தையாகவும் கணவராகவும் இருப்பதைப் பார்ப்பது என் இதயம் நிரம்பி இருக்கிறது. மீர் மற்றும் நான் உன்னை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் அட்லீ, முகப்புத்தகம் எனும் குறும்படத்தை எழுதியபோது அந்த படத்தின் ஹீரோயினாக நடித்த நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் பிரியா திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கினாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருவார். அவ்வப்போது, அட்லீயுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் பர்த்டே பார்ட்டி என தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











