For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னது பிரியா பவானி சங்கர் நடிப்புக்கு முழுக்கா.. அறிமுகப்படுத்திய மேயாத மான் இயக்குநர் ட்வீட்!

  |

  சென்னை: காதலனோடு புதிய வீட்டில் குடியேற போவதாக நடிகை பிரியா பவானி சங்கர் அறிவித்த நிலையில், அவர் சினிமாவில் இனிமேல் நடிக்கப் போவதில்லை என இயக்குநர் ரத்னகுமார் போட்டுள்ள ட்வீட் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

  செய்திவாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் ரத்னகுமார் இயக்குநராக அறிமுகமான மேயாத மான்படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமானார்.

  முதல் படத்திலேயே பிரியா பவானி சங்கர் நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

  காதல்னா இப்படி இருக்கணும்..பீச் ஓரத்தில் புது வீடு..பிரியா பவானி சங்கரின் இன்ஸ்டா போஸ்ட்!காதல்னா இப்படி இருக்கணும்..பீச் ஓரத்தில் புது வீடு..பிரியா பவானி சங்கரின் இன்ஸ்டா போஸ்ட்!

  மேயாத மான் பிரியா பவானி சங்கர்

  மேயாத மான் பிரியா பவானி சங்கர்

  கடந்த 2017ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ், இந்துஜா ரவிச்சந்திரன், விவேக் பிரசன்னா நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். புதிய தலைமுறை செய்தியாளராக இருந்த பிரியா பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமான நிலையில், அங்கிருந்து சினிமாவில் அதிரடி என்ட்ரி கொடுத்தார்.

  நல்ல கதாபாத்திரங்கள்

  நல்ல கதாபாத்திரங்கள்

  கவர்ச்சி குயினாக எல்லாம் சினிமாவில் நடிக்காமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  பல வருட காதல்

  பல வருட காதல்

  சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நடிகை பிரியா பவானி சங்கர் தனது நண்பர் ராஜவேல் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், 18 ஆண்டுகளாக கடற்கரை பகுதியில் வீடு கட்டி நிலவை ரசிக்க வேண்டும் என்கிற தங்களது கனவு தற்போது நிறைவேறி உள்ளதாக அவர் புதுமனை புகுவிழா நடத்திய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார்.

  திருமண வாழ்த்துக்கள்

  திருமண வாழ்த்துக்கள்

  ஜோடியாக இருவரும் புது வீட்டில் குடியேறுவதை பார்த்த மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இருவருக்கும் ஹாப்பி மேரிட் லைஃப் என திருமண நாள் வாழ்த்துக்களை போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கி விட்டார். மேலும், அவர் பதிவிட்ட ட்வீட் இன்னொரு பெரிய புயலையும் சினிமா துறையில் கிளப்பி உள்ளது.

  சினிமாவுக்கு முழுக்கு

  சினிமாவுக்கு முழுக்கு

  சும்மா கிளப்பிவிடுவோம் என போட்டு நடிகை பிரியா சினிமாவுக்கு முழுக்கு என போட்டு ஹாப்பி மேரிட் லைஃப் என்றும் பதிவிட்டு தனது காமெடி சென்ஸை காட்டியிருக்கிறார் ஆடை, குலு குலு படங்களின் இயக்குநர் ரத்னகுமார். பிரியா பவானி சங்கரை அறிமுகப்படுத்தியவரே இப்படி சொல்றாரே ஒருவேளை இருக்குமோ என நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

  கல்யாணம்லா ஆகல

  கல்யாணம்லா ஆகல

  உடனடியாக நடிகை பிரியா பவானி சங்கர் அந்த ட்வீட்டுக்கு கீழ், இன்னமும் எங்களுக்கு கல்யாணம் எல்லாம் ஆகல.. இப்போதைக்கு புதுமனை புகுவிழா தான் என்றும் உங்களுடைய வாழ்த்துக்களை எதிர்காலத்துக்கு சேமித்து வைத்துக் கொள்கிறோம் என பிரியா பவானி சங்கர் ட்வீட் போட்டு விளக்கி உள்ளார்.

  சிம்பு டு கமல்

  சிம்பு டு கமல்

  நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் சிம்புவின் பத்து தல, எஸ்ஜே சூர்யாவின் பொம்மை, ஜெயம் ரவியின் அகிலன், ராகவா லாரன்ஸின் ருத்ரன், டிமான்டி காலனி 2 மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் உள்ளன. இப்போதைக்கு பிரியா பவானி சங்கர் சினிமாவுக்கு முழுக்கு போடும் வாய்ப்பே இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

  English summary
  Priya Bhavani Shankar plans to quit Cinema; Director Rathnakumar funny tweet shocks her fans in social media. Priya Bhavani Shankar shares a couple of romantic photos with her lover and announces they built a new house in beach side.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X