»   »  வைபவ் ஜோடியானார் டிவி நடிகை ப்ரியா பவானி சங்கர்

வைபவ் ஜோடியானார் டிவி நடிகை ப்ரியா பவானி சங்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வைபவ் நடிக்கும் மேயாத மான் படம் மூலம் ஹீரோயினாகியுள்ளார் டிவி சீரியல் நடிகை ப்ரியா பவானிசங்கர்.

கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர். தனது காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாவதற்காக அந்த தொடரில் இருந்து விலகினார்.

Priya Bhavani Shankar's debut movie is Meyaadha Maan

இந்நிலையில் அவர் பெரியதிரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். புதுமுகம் ரத்ன குமார் இயக்கத்தில் பைவப் ஹீரோவாக நடித்துள்ள படத்தில் ப்ரியா தான் ஹீரோயின்.

வட சென்னையில் நடக்கும் காதல் கதையான இந்த படத்திற்கு மேயாத மான் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தை கார்த்திகேயன் சந்தானம் இயக்கியுள்ளார்.

Priya Bhavani Shankar's debut movie is Meyaadha Maan

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ப்ரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

English summary
TV sensation Priya Bhavani Shankar is making her debut in Kollywood through Vaibhav starrer Meyaadha Maan. She has released the first look of the movie on her facebook page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil