»   »  அட்டகாசமா தமிழ் பேசும் ப்ரியா பிரகாஷ்... தமிழ்ல நடிக்கணுமாம்!

அட்டகாசமா தமிழ் பேசும் ப்ரியா பிரகாஷ்... தமிழ்ல நடிக்கணுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priya Prakash Varrier: Social Media Queen

ப்ரியா பிரகாஷ் வாரியர்... இந்திய திரையுகையே சென்சேஷனல் ஆக்கியுள்ள புது மலையாள நடிகை.

சமூக வலைத் தளங்களில் இவரது புருவ நெரிப்பும், கண்ணடிப்பும்தான் பிரதானமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பக்காவாகத் தமிழில் பேசியுள்ளார். பிறந்தது கேரளா திருச்சூர் என்றாலும் தனக்கு தமிழ் நன்கு தெரியும் என்கிறார்.

Priya Prakash Varrier's dream

தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் தன் கனவு என்றும், விஜய், விஜய் சேதுபதி போன்றவர்களுடன் இணைந்து நடிக்க விரும்புவதாகவும் ப்ரியா தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்ப் படங்களில் நடிக்கும்போது தன் சொந்தக் குரலிலேயே பேச விரும்புகிறாராம் ப்ரியா.

ப்ரியாவின் முதல் படம் ஒரு அடார் லவ். வரும் மார்ச் 3-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. அதற்குள்ளேயே அனைத்து மொழிகளிலும் தேடப்படும் நடிகையாகிவிட்டார் ப்ரியா.

English summary
Priya Prakash Varrier has said that her dream is acting in Tamil movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil