»   »  பிரியா வாரியரின் ஃபேவரிட் தமிழ் நடிகர் யார் தெரியுமா? இவருடன் நடிக்க ஆசையாம்!

பிரியா வாரியரின் ஃபேவரிட் தமிழ் நடிகர் யார் தெரியுமா? இவருடன் நடிக்க ஆசையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
எக்ஸ்பிரஸ் குயின் பிரியா இந்த தமிழ் நடிகரின் ரசிகையா..?

சென்னை : ஓமர் லுலு இயக்கியிருக்கும் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்‌ஷன் இடம்பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், பிரியா பிரகாஷ் வாரியர் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவருக்கு பிடித்த தமிழ் ஹீரோ விஜய் தானாம்.

சென்சேஷன் நாயகி

சென்சேஷன் நாயகி

யூ-டியூப் பாடல்களில் 'ஜிமிக்கி' கம்மல் மூலம் ஷெர்லி புகழ்பெற்றிருக்கிறார். அடுத்து 'ஒரு அடார் லவ்' படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் யூ-ட்யூப் சென்சேஷன் நாயகி லிஸ்டில் வந்துவிட்டார். யார் இந்த பிரியா என்று பலரும் தற்போது தேட, ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டார் பிரியா.

ஒரு அடார் லவ்

ஒரு அடார் லவ்

'ஒரு அடார் லவ்' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஒமர் லுலு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான வினித் ஶ்ரீனிவாசன் பாடியுள்ள 'மாணிக்ய மலராய பூவி' என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு யூ-டியூபில் வெளியிடப்பட்டது.

 ஒரே வீடியோவில்

ஒரே வீடியோவில்

ஒரே வீடியோவில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். 'ஒரு அடார் லவ்' படத்தில் வரும் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

இந்நிலையில், ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என பிரியா பிரகாஷ் வாரியரிடம் கேட்டதற்க்கு, "இப்போது உள்ளவர்களில் துல்கர் சல்மானோடு நடிக்கவேண்டும் என்பதே என் கனவு" என கூறியுள்ளார் பிரியா.

விஜய் ரசிகை

இந்நிலையில் பிரியா பிரகாஷ் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் எனும் தகவல் வெளியாகியுள்ளது. அவரின் டப்ஸ்மாஷ் பலவற்றை விஜய் படங்களில் இருந்து தான் செய்துள்ளார். கேரளாவில் ஏற்கெனவே விஜய்க்கு ரசிகர்கள் பலம் அதிகம் என்று தெரியும். தற்போது இதன் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

English summary
'Manikya Malaraya Poovi' song of 'Oru Adaar Love' was recently released. Priya Prakash Varrier's Reaction is being viral on social networks. Priya Prakash Varrier's favorite Tamil hero is Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil