»   »  "யம்மாடீ... என்ன முத்தம்யா இது..?" பிரியா வாரியரின் அசரவைக்கும் அடுத்த வீடியோ!

"யம்மாடீ... என்ன முத்தம்யா இது..?" பிரியா வாரியரின் அசரவைக்கும் அடுத்த வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priya Prakash Varrier: Social Media Queen

சென்னை: 'ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்‌ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தலான ரியாக்‌ஷனுடன் 'ஒரு அடார் லவ்' படத்தின் அடுத்த டீசர் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

சென்சேஷன் நாயகி

சென்சேஷன் நாயகி

'ஜிமிக்கி' கம்மல் ஷெரிலுக்கு பிறகு 'ஒரு அடார் லவ்' படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் சென்சேஷன் நாயகி லிஸ்டில் வந்துவிட்டார். யார் இந்த பிரியா என்று பலரும் தற்போது தேட, கூகுள் தேடல் பட்டியலில் இந்திய அளவில் டாப் ஆகிவிட்டார் பிரியா.

ஒரு அடார் லவ்

ஒரு அடார் லவ்

'ஒரு அடார் லவ்' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஒமர் லுலு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான வினித் ஶ்ரீனிவாசன் பாடியுள்ள 'மாணிக்ய மலராய பூவி' என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு யூ-டியூபில் வெளியிடப்பட்டது.

 ஒரே வீடியோவில்

ஒரே வீடியோவில்

'மாணிக்ய மலராய பூவி' பாடலின் வீடியோ மூலம் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். இந்தப் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

பிரியா வாரியர் ரியாக்‌ஷன்ஸ் சமூக வலைதளமெங்கும் செம வைரல் ஆனதைத் தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனார் பிரியா பிரகாஷ் வாரியர். தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்திருந்த பெயர் இந்திய அளவில் ட்ரெண்டானதால் யார் இவர் எனத் தேட ஆரம்பித்துவிட்டனர்.

இரண்டாவது டீசர்

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இன்னொரு டீசரையும் வெளியிட்டுள்ளனர் 'ஒரு அடார் லவ்' குழுவினர். இந்த டீசரில் பிரியா வாரியர் தன் கையை துப்பாக்கி போல வைத்துக்கொண்டு முத்தத்தை அதில் நிரப்பி காதலரைப் பார்த்துச் சுடுகிறார்.

அசந்துபோன ரசிகர்கள்

புருவ நெரிப்பிலும், கண் சிமிட்டலிலும் ரசிகர்களைச் சொக்கவைத்த பிரியா வாரியரின் இந்த முத்த துப்பாக்கி ரியாக்‌ஷன் ரசிகர்களை அசரவைத்துள்ளது. காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

English summary
Latest sensation Priya varriers Valentine's day special is gun shot reaction. 'Oru adaar love' second teaser was released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil