»   »  மக்கா, என் மீது இவ்வளவு பாசமா?: ரசிகர்களுக்காக ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ப்ரியா வாரியர்

மக்கா, என் மீது இவ்வளவு பாசமா?: ரசிகர்களுக்காக ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ப்ரியா வாரியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தற்போது ஷெரிலை தொடர்ந்து வைரலான மற்றொரு சேச்சி..!!- வீடியோ

திருவனந்தபுரம்: தன் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஒரு அடார் லவ் படத்தில் நடித்துள்ளார் ப்ரியா பிரகாஷ் வாரியர். அவர் ஒரு பாடலில் கண்ணால் பேசுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது. கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதும் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் ப்ரியா.

கூகுளில் ப்ரியாவை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ப்ரியா

ப்ரியா

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ப்ரியா பிரகாஷ் வாரியரை பின்தொடருவோரின் எண்ணிக்கை ஒரே நாளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஒரே நாளில் பெரிய சென்சேஷனாகிவிட்டார்.

வைரல்

வைரல்

ப்ரியா கண்ணால் பேசி, வெட்கப்பட்டு சிரிக்கும் வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கிவிட்டனர். வாட்ஸ்ஆப்பிலும் பலர் ஷேர் செய்துள்ளனர்.

பேச்சு

பேச்சு

தேசிய ஊடகங்கள் கூட ப்ரியா பிரகாஷ் வாரியர் பற்றி செய்தி வெளியிடும் அளவுக்கு மிகவும் பிரபலமாகிவிட்டார். ஜிமிக்கி கம்மல் ஷெரிலை எல்லாம் முந்திவிட்டார் ப்ரியா.

வீடியோ

தன் மீது ரசிகர்கள் வைத்துள்ள பாசத்தை பார்த்து நெகிழ்ந்த ப்ரியா அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாடலை போன்றே படத்திற்கும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளார்.

English summary
Internet sensation Priya Prakash Varrier has released a video on social media thanking fans for their unconditional love. She has requested the fans to support her movie also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil