»   »  கீர்த்தி, சோஃபிக்கண்ணுவுக்கு பிறகு புருவத்தால் புயலைக் கிளப்பிய பிரியா வாரியர்!

கீர்த்தி, சோஃபிக்கண்ணுவுக்கு பிறகு புருவத்தால் புயலைக் கிளப்பிய பிரியா வாரியர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தற்போது ஷெரிலை தொடர்ந்து வைரலான மற்றொரு சேச்சி..!!- வீடியோ

சென்னை : 'ஜிமிக்கி கம்மல்' ஷெரிலுக்கு பிறகு மலையாள உலகின் சமீபத்திய வைரல் பிரியா பிரகாஷ் வாரியர் தான். 'ஒரு அடார் லவ்' படத்தில் நடித்திருக்கும் பிரியாதான் ரசிகர்களின் லேட்டஸ்ட் சென்சேஷன்.

ஓமர் லுலு இயக்கியிருக்கும் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

இந்தப் பாடலில் அவர் அழகாகக் கண்சிமிட்டுவது ரசிகர்களை சொக்கவைத்திருக்கிறது. கீர்த்தி சுரேஷ், 'பசங்க' சோஃபிக்கண்ணு ஆகியோருக்குப் பிறகு பிரியாவின் புருவ கண்சிமிட்டலைச் சிலாகிக்கிறார்கள் சமூக ஊடக ரசிகர்கள்.

மலையாள நடிகைகள்

மலையாள நடிகைகள்

தமிழ்நாட்டில் மலையாள நடிகைகள், பெண்கள் மீதான தாக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் மறையாது போலிருக்கிறது. நடிகைகளில் மலையாள நடிகையான நயன்தாரா நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த பல நடிகைகள் தமிழ் சினிமா மூலம் புகழ் பெற்றிருக்கிறார்கள்.

ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு

ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு

யூ-டியூப் பாடல்களில் 'ஜிமிக்கி' கம்மல் மூலம் ஷெர்லி புகழ்பெற்றிருக்கிறார். அடுத்து 'ஒரு அடார் லவ்' படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் யூ-ட்யூப் சென்சேஷன் நாயகி லிஸ்டில் வந்துவிட்டார்.

ஒரு அடார் லவ்

ஒரு அடார் லவ்

'ஒரு அடார் லவ்' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஒமர் லுலு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான வினித் ஶ்ரீனிவாசன் பாடியுள்ள 'மாணிக்ய மலராய பூவி' என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு யூ-டியூபில் வெளியிடப்பட்டது.

ட்ரெண்டிங்கில் முதலிடம்

ட்ரெண்டிங்கில் முதலிடம்

அந்தப் பாடலில் ஒரு இடத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் இரண்டு புருவங்களையும் உயர்த்தி, உயர்த்திக் காட்டியது ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்துவிட்டது. இப்போது அந்தப் பாடல்தான் யூ-டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

ரசிகர்கள் அதிகரிப்பு

ரசிகர்கள் அதிகரிப்பு

உடனே பிரியா பிரகாஷ் வாரியர் யார் என்று சமூக வலைத்தளங்களில் தேட ஆரம்பித்து அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டடேயிருக்கிறது. கூடவே பல பேக் ஐடிகளும் உருவாகி வருகின்றன.

தமிழுக்கும் வருவாரா

தமிழுக்கும் வருவாரா

18 வயதேயான பிரியா வாரியர் தற்போது கேரளாவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். 'சங்க்ஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டவர் இப்போது நாயகிகளில் ஒருவராகியிருக்கிறார். சீக்கிரமே அவரை தமிழ் சினிமா பக்கம் அழைத்து வந்துவிடுவார்கள்.

புருவ நெரிப்பு

புருவ நெரிப்பு

தமிழ் ரசிகர்களை கண்சிமிட்டியே கவிழ்த்த நாயகிகள் பட்டியலில் 'ரஜினிமுருகன்' கீர்த்தி சுரேஷும், 'பசங்க' சோஃபிக்கண்ணுவும் தான் இருந்து வந்தார்கள். இப்போது அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.

Read more about: oru adaar love
English summary
Priya Prakash Varrier is the latest sensation after 'Jimikki Kammal' Sheryl. After Keerthi Suresh, 'Pasanga' Sophikannu, Priya prakash varrier's winking is attracted fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil