இதுதான் குடியும் குடித்தனமுமா வாழ்றதா.. வீட்டிலேயே பார் செட்டப் வைத்துள்ள பிரபல நடிகை!

சென்னை: புதிதாக கட்டிய தனது வீட்டில் பார் செட்டப்பும் வைத்திருப்பதை வெளிப்படையாக காட்டி பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹோம் டூர் வீடியோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

செய்திவாசிப்பாளர், சினிமா நடிகை, சின்னத்திரை நடிகை மற்றும் யூடியூபர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகை பிரியா பிரின்ஸ்.

பசங்க, வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

பிரியா பிரின்ஸ்

பிரியா பிரின்ஸ்

செய்திவாசிப்பாளராக தனது மீடியா வழ்க்கையை ஆரம்பித்த சென்னையை சேர்ந்த பிரியா பிரின்ஸ், விஜய் டிவியில் ஒளிபரப்பான இ.எம்.ஐ. தவணை முறை வாழ்க்கை எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். பசங்க, வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

20 கிலோ குறைத்து

20 கிலோ குறைத்து

தமிழ் கடவுள் முருகன் சீரியலில் பார்வதியாக நடித்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். சீரியல்களில் நடித்து வந்த இவர் திடீரென உடல் எடை அதிகரித்த நிலையில், கடுமையாக வொர்க்கவுட் செய்து சுமார் 20 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து இப்போதும் பார்க்க இளமையான பெண்ணாக காட்சி தருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார் என்று சொன்னால், யாருமே நம்ப மாட்டார்கள். சன் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட வீடு

பிரம்மாண்ட வீடு

சொந்தமாக ஒரு வீட்டை அதுவும் நமக்கு பிடித்தமாக கட்ட வேண்டும் என்பதெல்லாம் கடைசி வரை பலருக்கும் கனவாகவே போய் விடுகிறது. ஆனால், சீரியல்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் பிரியா பிரின்ஸ் பிரம்மாண்டமாக தனது கனவு வீட்டை கட்டி அதன் ஹோம் டூர் வீடியோவை தனது யூடியூப் சேனலிலேயே வெளியிட்டு வியூஸ்களை அள்ளி வருகிறார்.

ஸ்குவிட் கேம் சாவி

ஸ்குவிட் கேம் சாவி

காரில் இருந்து வீட்டுக்குள் நுழைந்து அதனை சுற்றிக் காட்டும் ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ள பிரியா பிரின்ஸ் தனது வீட்டுக்காக நெட்பிளிக்ஸில் பிரபலமான ஸ்குவிட் கேம் தீம் கொண்ட சாவியை வாங்கி உள்ளே என காட்டும் போதே பலருக்கும் பகிர் கிளம்புகிறது. ஆனால், வீட்டுக்குள் சென்று பார்த்தால் காஸ்ட்லி சோபா, ஊஞ்சல் என ஒவ்வொன்றையும் அவர் பார்த்து பார்த்து வாங்கிப் போட்டிருப்பது ரசிகர்களை மலைக்க வைக்கிறது.

வீட்டுக்குள்ளே பார்

வீட்டுக்குள்ளே பார்

"ப்ரியா வீட்டில் பார் செட்டப்" என்கிற டைட்டிலில் தான் ரசிகர்களை கவரும் விதமாக டைட்டில் வைத்து அந்த வீடியோவையே அவர் வெளியிட்டுள்ளார். கிச்சன் அருகே ராயல் செட்டப்பில் பக்காவாக பெரிய பார் செட்டப்பே பிரியா பிரின்ஸ் வைத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் குடியும் குடித்தனமுமாக வாழ்றீங்க பிரியா வாழ்த்துக்கள் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X