»   »  நெட்டிசன்களால் ப்ரியா வாரியரின் வருமானம் இவ்வளவு அதிகரித்துள்ளதா?

நெட்டிசன்களால் ப்ரியா வாரியரின் வருமானம் இவ்வளவு அதிகரித்துள்ளதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priya Prakash Varrier: Social Media Queen

திருவனந்தபுரம்: ப்ரியா வாரியர் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட எவ்வளவு பணம் வாங்குகிறார் என்று ஒரு தகவல் தீயாக பரவியுள்ளது.

ஒமர் லுலு இயக்கி வரும் ஒரு அடார் லவ் படத்தில் வரும் மாணிக்ய மலராய பாடல் வீடியோவில் புருவத்தை உயர்த்தி கண்ணடித்ததால் பிரபலமானவர் ப்ரியா வாரியர்.

அவர் கண்ணடித்தது பலரையும் கவர இயக்குனரோ கதையில் திருத்தம் செய்து ப்ரியாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

கண்ணடி வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு வைரலாக்கிவிட்டனர். இதனால் ஒரே நாளில் ப்ரியா வாரியர் நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.

போஸ்ட்

போஸ்ட்

பல்வேறு நிறுவனங்கள் பிரபலங்களுக்கு பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் போஸ்ட் போட வைக்கிறார்கள். இதற்காக பிரபலங்களுக்கு பெரும் தொகையை அளிக்கிறார்கள்.

சம்பாத்தியம்

சம்பாத்தியம்

திடீர் என்று ஏகப்பிரபலமான ப்ரியா வாரியர் சமூக வலைதளத்தில் ஒரு போஸ்ட் போட ரூ. 8 லட்சம் வாங்குவதாக ஒரே பேச்சாகக் கிடக்கிறது. கண்ணடிக்கும்போதே சம்பாதித்துக் கொள்ளப் பார்க்கிறார் என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

ஸ்டார்கள்

ஸ்டார்கள்

பாலிவுட்டில் உள்ள ஏ லிஸ்ட் பிரபலங்கள் கூட சமூக வலைதளங்களில் போஸ்ட் போட ரூ. 8 லட்சம் வாங்குவது இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள். ப்ரியா காட்டில் பண மழை தான்...

English summary
According to reports, Winking sensation Priya Prakash Varrier is charging Rs. 8 lakh for a social media post. Netizens are saying that she is making hay while the wink lasts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil