»   »  புருவ அழகியின் தமிழ் சினிமா என்ட்ரி உறுதியானது.. டைரக்டர் யார் தெரியுமா?

புருவ அழகியின் தமிழ் சினிமா என்ட்ரி உறுதியானது.. டைரக்டர் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'ஒரு அடார் லவ்' மலையாளப் படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' பாடலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இந்தப் பாடலில் தனது புருவ நெளிப்பு, கண் சிமிட்டல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பிரியா வாரியர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனார்.

பிரியா வாரியர் தற்போது தமிழ் சினிமாவுக்கு வர இருக்கிறார். நலன் குமார்சாமி இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் இந்தப் புருவ அழகி.

பிரியா வாரியர்

பிரியா வாரியர்

மலையாளத்தின் 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் பாடல் டீசரில் பள்ளி மாணவியான பிரியா வாரியர் தனது பாய் ஃப்ரெண்டை பார்த்து கண் சிமிட்டும் காட்சி, புருவத்தை நெளிக்கும் காட்சி ஆகியவை சமூக வலைதளங்களில் செம வைரலாகின.

புருவ அழகி

புருவ அழகி

உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆன பிரியா வாரியருக்கு ஒரே படத்தில் மார்க்கெட் எகிறியது. தெலுங்கு, தமிழ், பாலிவுட் படங்களில் நடிப்பதற்கும் பிரியாவுக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை சிலபல மில்லியன்கள் ஆனது.

தமிழில்

தமிழில்

பிரியா வாரியரை கே.வி.ஆனந்த் சூர்யா படத்தில் நடிக்க வைப்பதாக பேச்சு அடிபட்டது. அதை கே.வி.ஆனந்த் மறுத்தார். சமீபத்தில் கேரளா சென்ற சித்தார்த் பிரியா வாரியரை சந்தித்துப் பேசியதால் அவர் படத்தில் நடிப்பாரா எனச் சந்தேகிக்கப்பட்டது.

நலன் குமாரசாமி படம்

நலன் குமாரசாமி படம்

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் பிரியா வாரியர் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் வரவேற்பு பெற்ற இயக்குநரான நலன் குமாரசாமி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் புருவ அழகி.

English summary
Priya Varrier became a celebrity in social networks, through her eye wink. Priya varrier is coming to Tamil cinema via 'Soodhu kavvum' director Nalan Kumarasamy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X