»   »  புருவத்தை உயர்த்தி கண்ணடிச்சேன், இயக்குனர் இம்பிரஸ் ஆகிட்டார்: ப்ரியா வாரியர்

புருவத்தை உயர்த்தி கண்ணடிச்சேன், இயக்குனர் இம்பிரஸ் ஆகிட்டார்: ப்ரியா வாரியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priya Prakash Varrier: Social Media Queen

திருவனந்தபுரம்: ஒரு அடார் லவ் பட பாடல் பிரபலம் ப்ரியா வாரியர் அந்த படத்தில் நடிக்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார்.

மலையாள சேனலான கைரலி டிவி கடந்த ஆண்டு நடத்திய கோல்டன் பியூட்டி அழகிப் போட்டியில் ப்ரியா பிரகாஷ் வாரியர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

அப்போதே சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது கைரலி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

பாடல்

பாடல்

ஒரு அடார் லவ் பட பாட்டு ஹிட்டாகும் என்று தெரியும். ஆனால் தேசிய அளவில் இந்த அளவுக்கு ஹிட்டாகும் என எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஹிட்

ஹிட்

பாட்டை கேட்டதும் பிடித்தது. பாட்டு ஹிட்டாகும் என்று தெரியும், ஆனால் வீடியோ ஹிட்டாகும் என தெரியாது. கண்ணால் ஏதாவது மேனரிசம் பண்ணுமாறு இயக்குனர் என்னிடம் கூறினார்.

கண்

கண்

இயக்குனர் சொன்னதும் புருவத்தை உயர்த்தி கண்ணடித்து காண்பித்தேன். அதை பார்த்து இயக்குனருக்கு மிகவும் பிடித்துப் போக அந்த நடிகரையும் கண்ணால் பேச வைத்தார்.

சைட் ரோல்

சைட் ரோல்

படத்தில் சைட் ரோலில் தான் என்னை எடுத்தார்கள். நான் கண்ணால் பேசியதால் இயக்குனர் இம்பிரஸ் ஆகி ஸ்க்ரிப்ட்டை மாற்றி என்னை மெயின் ரோலில் நடிக்க வைத்துள்ளார்.

போலி கணக்கு

போலி கணக்கு

நான் முதலில் ஃபேஸ்புக்கிலேயே இல்லை. ஆனால் தற்போது ஃபேஸ்புக்கில் என் பெயரில் ஏகப்பட்ட போலி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் ஏமாந்துவிடாமல் இருக்க ஃபேஸ்புக் வந்துள்ளேன். தற்போது கல்லூரியில் உள்ளவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று தெரியவில்லை. கல்லூரிக்கு செல்ல மகிழ்ச்சி கலந்த டென்ஷனாக உள்ளது என்றார் ப்ரியா.

English summary
Priya Prakash Varrier said in an interview that Oru Adaar Love director Omar Lulu got impressed by her mannerisms and changed her role from supporting to lead one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil