»   »  ப்ரியா வாரியர் இல்லை சூர்யாவுக்கு ஜோடி பெரிய ஹீரோயினாம்

ப்ரியா வாரியர் இல்லை சூர்யாவுக்கு ஜோடி பெரிய ஹீரோயினாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா பிரியா வாரியர்?- வீடியோ

சென்னை: சூர்யாவின் படத்தில் ப்ரியா வாரியர் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடிக்கிறார். சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

Priya Varrier is not part of Suriyas movie

இந்த படத்தை அடுத்து அவர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது கே.வி. ஆனந்த், சூர்யா இணைந்து பணியாற்றும் 3வது படம் ஆகும். இந்நிலையில் கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கண்ணடித்து பிரபலமான ப்ரியா வாரியர் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து கே.வி. ஆனந்த் கூறியிருப்பதாவது,

சூர்யா படத்தின் ஹீரோயின் ப்ரியா வாரியர் கிடையாது. நாங்கள் அவரை அணுகவே இல்லை. நாங்கள் பெரிய நடிகையை ஹீரோயினாக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director K.V. Anand said that Priya Varrier is not Suriya's love interest in his upcoming movie. Anand is looking for top actress to cast opposite Suriya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X