»   »  சூர்யா ஜோடியாகிறாரா பிரியா வாரியர்.. கே.வி.ஆனந்த் படத்திற்கு பேச்சுவார்த்தை!

சூர்யா ஜோடியாகிறாரா பிரியா வாரியர்.. கே.வி.ஆனந்த் படத்திற்கு பேச்சுவார்த்தை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா பிரியா வாரியர்?- வீடியோ

சென்னை : சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து, கே.வி.ஆனந்த் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் ஹிரோயினாக பிரியா வாரியர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது உறுதியானால், பாலிவுட் படங்களில் நடிக்கவிருக்கும் பிரியா வாரியர் அதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தலையைக் காட்டுவார்.

சூர்யா

சூர்யா

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வருகிறார். ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் சூர்யா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

கேவி ஆனந்த்

கேவி ஆனந்த்

'என்.ஜி.கே' படத்தின் ஷூட்டிங் முடிந்தபிறகு சூர்யா, கே.வி.ஆனந்துடன் மூன்றாவது முறையாக இணைகிறார். இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

இந்தப் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற இருக்கிறது. இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் ஒரு ஆச்சரியத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரியா வாரியர்

பிரியா வாரியர்

இந்தப் படத்தில் 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் டீசரில் கண் சிமிட்டல், புருவ நெளிப்பின் மூலம் பிரபலமான பிரியா வாரியரை ஹிரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இது உறுதியானால், பிரியா வாரியரை வரவேற்க தமிழ் ரசிகர்கள் ரெடி!

English summary
Suriya is currently acting in 'NGK' directed by Selvaraghavan. Next, it is reported that Priya Varrier will act as heroine of Suriya film in KV Anand's direction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X