»   »  ஒரே டேக்கில் ஓகே ஆன வைரல் ரியாக்‌ஷன்... சொல்லிக்கொடுத்தது யாரு தெரியுமா?

ஒரே டேக்கில் ஓகே ஆன வைரல் ரியாக்‌ஷன்... சொல்லிக்கொடுத்தது யாரு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரியா பிரகாஷ் வாரியர் biography

சென்னை : பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் ரோஷன் அப்துல் ரஹூஃபின் ரியாக்‌ஷன்கள் இணைய தளங்களில் செம வைரலானது அனைவரும் அறிந்ததே.

இந்த வீடியோவுக்கு நேற்று ஒன்றரை கோடியாக இருந்த பார்வைகளின் எண்ணிக்கை இன்று இரண்டு கோடியைத் தாண்டிவிட்டது.

இந்நிலையில், பிரியாவும் ரோஷனும் செய்த ரியாக்‌ஷன்கள் சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரியாக்‌ஷனை எப்படி செய்யவேண்டும் என சொல்லிக்கொடுத்தது டைரக்டர் ஒமர் லுலு தானாம்.

பிரியா வாரியர்

பிரியா வாரியர்

புருவத்தை உயர்த்தி இளைஞர்களைச் சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த, 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்ய மலரே பூவி' பாடலை யூ-டியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியைத் தாண்டிவிட்டது.

சிங்கிள் டேக்கில் எடுத்தது

சிங்கிள் டேக்கில் எடுத்தது

இந்தப்பாடலில் பிரியாவின் புருவம் உயர்த்தும் சமிஞ்ஞைகளை பார்க்கும்போது இவ்வளவு கஷ்டமான விஷயத்தை படமாக்கும்போது பல டேக்குகள் வாங்கியிருப்பார் என்றுதான் தோன்றும். ஆனால் இதை ஒரே டேக்கில் ஓகே பண்ணிவிட்டாராம் பிரியா வாரியர்.

ரோஷனும் சிங்கிள் டேக்கில்

ரோஷனும் சிங்கிள் டேக்கில்

கூடவே அவருக்கு ஈடுகொடுத்து பதிலுக்கு கண்ணசைவு காட்டிய ரோஷனும் ஒரே டேக்கில் இதை நடித்தாராம். இவர்கள் இருவருக்கும் எப்படி புருவம் உயர்த்த வேண்டும் என பயிற்சி கொடுத்தவர் படத்தின் இயக்குனர் ஒமர் லுலு தானாம்.

தயாரிப்பாளருக்கு செம லாபம்

தயாரிப்பாளருக்கு செம லாபம்

'ஒரு அடார் லவ்' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமைக்காக பிரபல நிறுவனம் தயாரிப்பாளரை அணுக அவர் ரூ. 2 கோடி எனச் சொல்லிவிட்டாராம். ஆனால் மலையாளத்தில் படத்தின் பட்ஜெட் என்னவோ ரூ 1.5 கோடி தானாம். பிரியா வாரியரின் மூலம் தயாரிப்பாளர் செம்ம கல்லா கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Priya Prakash Varrier and Roshan Abdul Rahoof are familiar on social media now. Priya varrier and Roshan's winking reaction was taken in single take in shoot. Director Omar Lulu explained how to do this reaction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil