நீயெல்லாம் ஒரு பொம்பளையா.. மோசமாக சண்டை போட்டுக் கொண்ட தாமரை மற்றும் பிரியங்கா!
சென்னை: ச்சீ.. தூ.. என்றும் நீயெல்லாம் ஒரு பொம்பளையா என்றும் எல்லை மீறிய வார்த்தைகளை போட்டு பிரியங்கா மற்றும் தாமரை போட்டுக் கொண்ட சண்டை ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
மற்ற ரியாலிட்டி ஷோக்களை விட பிக் பாஸ் இன்னமும் ஏன் ஹைலைட்டாக தெரிகிறது என்றால் இது போன்ற சர்ச்சைகள் மிகுந்த சீன்களால் தான்.
தாமரைக்கு தான் தான் என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து வளர்த்ததாக பிரியங்கா நொடிக்கு நொடி பேசுவது எல்லாம் தவறான விஷயம் என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

சபாஷ் சரியான போட்டி
ராஜு மற்றும் பாவனியின் சண்டை பெரிதாக வெடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தாமரை மற்றும் பிரியங்காவின் சண்டை சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு செவ்வாய் கிழமை எபிசோடில் களைகட்டியது.

பேச வேணாம்
அடிதடி பிரச்சனை வேண்டாம் இந்த டாஸ்க்கையும் பேசி விளையாடலாம் என முடிவெடுத்தால் அப்புறம் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இருக்கும் அதற்காக முதலிலே தாமரை செல்வி சும்மா பேசிட்டுலாம் இருக்க வேண்டாம். இறங்கி விளையாடி ஜெயிக்கலாம் என ஆரம்பித்து வைத்தார்.

தள்ளி விட்டு சண்டை
தாமரையின் முட்டைகளை எல்லாம் அமீர் ஆரம்பத்திலேயே இஷ்டத்துக்கு உடைக்க ஆரம்பித்து விட்டான். அமீருக்கும் தாமரைக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை தான். தாமரை பிரியங்காவின் முட்டைகளை உடைக்க நினைக்க அமீரை பிரியங்கா துணைக்கு அழைக்க வெடித்தது சண்டை. இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட தாமரை தனது வெயிட்டை போட்டு பிரியங்காவை படாரென தள்ளி விட பயந்து போய் கத்த ஆரம்பித்து விட்டார் பிரியங்கா.

கேட்க மாட்டீங்களா பிக் பாஸ்
தாமரையின் தோளை பிடித்து பிரியங்கா தள்ள பிரியங்காவின் மார்பை பிடித்து தாமரை தள்ளி விட்டதாக பிரியங்கா கத்த ஆரம்பித்து விட்டார். பிக் பாஸ் அவ எப்படி என்ன அப்படி பண்ணலாம்.. பிக் பாஸ் இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா என கத்த ஆரம்பித்து விட்டார். இதே பிரியங்கா தான் பாவனியிடம் ராஜு ஆடியது கேம் என புரிய வைத்தார்.

நான் தான் பண்ணேன்
தாமரை செல்வி ஒரு புத்திசாலியான பிளேயர். நம்மை விட அவளுக்கு எல்லா விஷயமும் தெரியும் என்றே ஆரம்பத்தில் இருந்து சொல்லி வந்த பிரியங்கா திடீரென தாமரைக்கு எல்லாத்தையும் நான் தான் கத்துக் கொடுத்தேன். அவளுக்கு பிரச்சனைன்னா நான் தான் முன்னாடி வந்தேன். எனக்கே இப்படி பண்ணிட்டாளே என டபுள் கேம் ஆட ஆரம்பித்து விட்டார்.

பொம்பளையா நீ
மொசப்ப புடிக்கிற நாய் முகத்தை பார்த்தா தெரியாது, நீ கத்துனா உன்னை விட நான் கத்துவேன், பொம்பளையா நீ என தாமரை எல்லை மீறி பிரியங்காவுக்கு எதிராக வார்த்தைகளை விட்டதை ஹவுஸ்மேட்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரசிகர்களும் ஆதரிக்கவில்லை. பதிலுக்கு பிரியங்கா ச்சீ.. தூ என பேசி விட்டார் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என கமெண்ட்டுகள் பறக்கின்றன.
Recommended Video

தாமரை அவுட்
பாவனியை தொடர்ந்து தாமரையின் முட்டைகள் அனைத்தும் உடைக்கப்பட்ட நிலையில், அவரும் பெட்ரூமில் போய் உட்கார்ந்து கொண்டார். நீ போய் விளையாடு சிபி, ராஜு கிட்ட முட்டையை கேளு என அனுப்பி வைக்க மறுபடியும் வந்து பிரியங்காவிடமே தாமரை மல்லுக்கு நின்றது பெரிய பிரச்சனையை கிளப்பியது. கடைசியில் அனைத்து முட்டைகளையும் இழந்த தாமரை இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


Click it and Unblock the Notifications











