என்னது பிரியங்கா ஜாலியான பொண்ணு இல்லையா? கமலுக்கு எதிராக கொந்தளிக்கும் பிரியங்கா ஆர்மி!
சென்னை: கன்ஃபெஷன் ரூமிற்குள் அழைத்து பிரியங்காவை நீங்களே உங்களை ஜாலியான பொண்ணுன்னு சொல்லிக்கிறீங்க என கமல் விளாசும் காட்சிகளை பார்த்து பிரியங்கா ஆர்மியினர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை 83 நாட்களாக அனைத்து புரமோக்களிலும் இடம்பெறும் அளவுக்கு கன்டென்ட் கொடுத்து காப்பாற்றி வரும் எங்கள் தானை தலைவி பிரியங்காவை கமல்ஹாசன் எப்படி அப்படி சொல்லலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் ராஜுவுக்கு அடுத்தபடியாக பிரியங்கா சேவ் ஆகி வரும் நிலையில், மக்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுள் பாதி மிருகம் பாதி
ஆளவந்தான் படத்தில் கடவுள் பாதி மிருகம் பாதி என கமல் எப்படி ஒரு கேரக்டரை உருவாக்கி இருந்தாரோ அதற்கு நிஜ வாழ்வில் உருவம் கொடுத்தது போல இருக்கிறார் பிரியங்கா என பிக்பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஜாலியாகவும் அதே நேரத்தில் வில்லியாகவும் இந்த சீசனில் பிரியங்கா மிரட்டி வருகிறார்.

ஜீலி பிரியங்கா
ஜாலியையே ஜீலி என சொல்லி ஃபன் பண்ணும் பிரியங்காவை பார்த்து கமல் உங்களை நீங்களே ஜாலியான பொண்ணு என அவங்க சொல்றதுக்கு முன்னாடியே சொல்லிக்கிறீங்களே என பிரியங்கா சுய தம்பட்டம் அடிப்பவர். ஆனால், உண்மையில் அவர் அப்படி இல்லை என்பது போல கமல் சொல்ல வருகிறார் என நினைத்து பிரியங்கா ஆர்மியினர் கமலையே திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஸ்ட்ராங் பிளேயர் இல்லை
ஏற்கனவே பிரியங்கா உங்களை நீங்களே ஸ்ட்ராங் பிளேயர் இல்லை என சொல்லிக்கிறீங்க அதை மக்கள் தான் சொல்லணும் என கமல் சொன்ன நிலையில், பிரியங்கா ஒரு ஸ்ட்ராங் பிளேயர் என ஏகப்பட்ட மக்கள் ஓட்டுப் போட்டு தொடர்ந்து அவரை டாப் லிஸ்டில் சேவ் செய்து வருவது கமலுக்கு தெரியவில்லையா? என கேள்வி கேட்டு விளாசி வருகின்றனர்.

இந்த வார ஸ்க்ரிப்ட்
விக்ரம் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் ஆண்டவர் எங்கே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கப் போகிறார். இந்த வாரம் இதையெல்லாம் கேள்வியாக கேளுங்க என பிக் பாஸ் இயக்குநர் எழுதி கொடுத்த கேள்விகளை கமல் படிக்கிறார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

உண்மையை சொன்னீங்க
பிரியங்கா தனக்குத் தானே ஜாலியான நபர் என்றும் பாசிட்டிவிட்டியை பரப்பும் நபர் என்றும் ஒரு முகத்திரையை போட்டுக் கொண்டு நல்ல பெயரை வாங்கி வருகிறார். இப்போதாவது சரியாக அவர் பற்றி எடுத்து சொன்னதற்கு நன்றி கமல் சார் என பிக் பாஸ் ரசிகர்கள் பிரியங்கா ஆர்மிக்கு எதிராகவும் கமெண்ட்டுகளை பிக் பாஸ் புரமோ 3க்கு கீழ் போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











