Don't Miss!
- News
உதயநிதி ஸ்டாலினின் புதிய முயற்சி! துணையாக நிற்கும் துரைமுருகன்! பரபரக்கும் அதிகாரிகள்!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே சமையல் நிபுணராக பிறந்தவர்களாம்...இவங்கள கல்யாணம் பண்றவங்க அதிர்ஷ்டசாலிகளாம்!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
நீச்சல் குளத்தில் தங்கையுடன் கும்மாளம்.. பிகினியில் பிறந்தநாள் கொண்டாடிய பிரியங்கா சோப்ரா!
மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா தனது தங்கை பரிணீத்தி சோப்ரா, கணவர் நிக் ஜோனஸ், குழந்தை மற்றும் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
40 வயதை கடந்தாலும் ஹாட்னஸ் குறையாமல் அப்படியே இருக்கும் பிரியங்கா சோப்ரா பாலிவுட், ஹாலிவுட் என அசத்தி வருகிறார்.
வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையின் முகத்தை மட்டும் மறைத்து அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகின்றன.

40 வயது
நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான உலக அழகி பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக பல ஆண்டுகளாக வலம் வருகிறார். சமீப காலமாக பே வாட்ச், மேட்ரிக்ஸ் 4 உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து அசத்தி வரும் டெஸி கேர்ள் பிரியங்கா சோப்ரா தனது 40வது பிறந்தநாளை கணவர், சகோதரி, குழந்தை மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார்.

மெக்ஸிகோவில் பர்த்டே பார்ட்டி
தனது பிறந்தநாள்பார்ட்டியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மெக்ஸிகோவிற்கு பறந்த பிரியங்கா சோப்ரா அங்கே டின்னர், நீச்சல் குளம், பார்ட்டி என பிறந்தநாளை படு ஜாலியாக கொண்டாடி உள்ளார். கடந்த ஜுலை 18ம் தேதி முதல் 48 மணி நேரத்துக்கு இடை விடாமல் பிறந்தநாள் பார்ட்டி சென்றதாக பிரியங்கா சோப்ராவின் தங்கையும் பாலிவுட் நடிகையுமான பரிணீத்தி சோப்ரா ட்வீட் போட்டு போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.

பிகினியில் பர்த்டே
சமீப காலமாக நடிகைகள் பிகினி உடையில் பர்த்டேவை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். நடிகை கத்ரீனா கைஃபை தொடர்ந்து பிரியங்கா சோப்ராவும் பிகினி உடையில் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அந்த ஹாட்டான புகைப்படங்களை பரிணீத்தி சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார்.

குழந்தையின் முகத்தை மறைத்து
நடிகர்களின் வாரிசுகளின் முகத்தை ஆரம்பத்தில் வெளியே காட்டாமல் மறைத்து வைக்கும் நடைமுறையை சிலர் செய்து வருகின்றனர். இதுவரை வாடகைத்தாய் மூலமாக பிறந்த குழந்தையின் முகத்தை உலகிற்கு காட்டாமல் மறைத்து வரும் பிரியங்கா சோப்ரா இந்த போட்டோவிலும், குழந்தையின் முகத்தை மட்டும் எமோஜி போட்டு மறைத்தபடி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.